**************************
ஆடி மாதம் தொடங்கி விட்டது. அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் படையெடுத்தப்படி உள்ளது. ஆடி மாதத்தின் எல்லா நாட்களும் அம்மனை வழிபட்டால், அவள் மனம் மகிழ்ந்து நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாள் என்பது ஐதீகம்.
அதிலும் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் வழிபாடுகளுக்கு அதிக மகத்துவம் உண்டு. அன்றைய தினங்களில் அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். அவற்றை காண கண் கோடி வேண்டும். சென்னையில் அம்மன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தலங்களில் எல்லாம் இதை காணலாம்.
அந்த வகையில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை பூப்பாவாடையும் சந்தன காப்பு அலங்காரத்தில் கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய தளம், திரிசூலம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயம் ஆகும். சென்னை-தாம்பரம் நெடுஞ்சாலையில் தாம்பரம் விமான நிலையம் எதிரே மிக அருகில் இத்தலம் அமைந்துளள்து.
இது புராதன சிறப்பு மிக்க புனிதமான திருத்தலமாகும். நான்கு மலைகளுக்கு மத்தியில் இத்தலம் உள்ளது. இதன் மூலம் இத்தலத்தில் ஈசன், நான்குவகை வேதங்களுக்கும் உட்பொருளாய் இருப்பதாக கருதப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த தலம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், திருநீற்றுச் சோழநல்லூர் திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இத்தலத்து ஈசனின் பெயர் திரிசூலநாதர் என்பதால் நாளடைவில் திரிசூலம் என்ற பெயர் நிலைத்து விட்டது.
ஒரு தடவை இந்த தலத்துக்கு வந்த பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இப்பகுதியில் ஒரு குளம் ஏற்படுத்தி, அதன் அருகில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றார்.
இதனால்தான் இந்த ஊருக்கு பிரம்மபுரி என்றும், இத்தலத்து ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். இத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை சிறப்புக் கொண்டது. தற்போதுள்ள ஆலயத்தை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
சிறிய கோவில்தான். அதனால் தானோ, என்னவோ பிரமாண்ட கோபுரம் எதுவும் இல்லை. ஆலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. வாசலுக்கு எதிரில் விநாயகர் உள்ளார். அவரை வழிபட்டு பிறகு கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கி உள்ளே செல்லாம்.
உள்ளே நுழைந்ததும் உட்புறத்தின் இடது பக்கத்தில் சூரியனும், வலது பக்கத்தில் சந்திரனும் இருப்பதைக் காணலாம். இவர்களை கடந்து சென்றால் திரிசூலநாதரை கண்டு வழிபடலாம். ஈசன் கிழக்கு முகமாக உள்ளார். ஈசனின் இடதுபுறம் சொர்ணம்பிகை நின்ற கோலத்தில் உள்ளார். தங்கக் கரத்துடன் அவர் அருள்பாலிப்பதைக் காணலாம்.
வெளிநாட்டவர்கள் இத்தலத்தை சூறையாடிய போது அம்மனின் கை உடைந்து போனது. இதனால் புதிதாக திரிபுரசுந்தரி சிலை செய்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அன்று இரவே அர்ச்சகர் கனவில் தோன்றிய சொர்ணம்பிகை, ``என்னை லிங்கம் அருகிலேயே வைத்திருங்கள்'' என்று கூறினாளாம்.
இதைத் தொடர்ந்து சொர்ணம்பிகை கை உடைக்கப்பட்ட இடத்தில் தங்கத்தால் செய்து பொருத்தி, மீண்டும் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அங்கிருந்த திரிபுரசுந்தரி தனி சன்னதிக்கு மாற்றப்பட்டாள்.அந்த சன்னதி தெற்கு நோக்கி காட்சித் தருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள்.
அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் 9 தினங்களும் அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்படும். கார்த்திகை தீபம் தினத்தன்று 4 மலை உச்சிகளிலும் தீபம் ஏற்றுவார்கள். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தின் கருவறை தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ளது.
கருவறை பின்பக்கம் சீனிவாச பெருமாள், காசி விசுவநாதர், விசாலாட்சி, ஆறுமுகன், முத்துக்குமாரசாமி, மார்க்கண்டேயன் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. உள்சுற்றில் ஒரே கல்லால் ஆன ஸ்ரீநாகயக் நோபவீத கணபதி உள்ளார். வீராசன கோலத்தில் தெட்சிணாமூர்த்தி, சாந்த வடிவ விஷ்ணு துர்க்கை ஆகியோரையும் காணலாம்.
இரு முகங்களுடன் அண்ட பேரண்ட பட்சியாய் சரபமூர்த்தி இருப்பதை வேறு எந்த தலத்திலும் காண இயலாது. ஆடல் வல்லான், சிவகாமவல்லி, நடராஜர், மாணிக்கவாசகர், சண்டீகேசுவரர் ஆகியோரையும் மறக்காமல் வழிபடுதல் வேண்டும்.
அதுபோல முதல் பிரகாரத்தில் 16 கால் மண்டப தூண்களில் உள்ள கிருஷ்ண லீலைகள் மனதை கொள்ளை கொள்ளும் அம்பாள் சன்னதிக்குப் பின்புறம் கிழக்கு முனையில் தெற்கு முகமாக காலபைரவர் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் அரசமரத் தடியில் விநாயகரும், நாகலிங்கங்களும் உள்ளனர். நவக்கிரக சன்னதி தனியே அமைந்துள்ளது.
அய்யப்பன், ஆதி சங்கரருக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கருவறை சுவற்றில் பஞ்ச தந்திரக் கதைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதை பார்த்து ரசிக்கலாம். தினமும் இத்தலத்தில் 2 வேளை ஆராதனை நடத்தப்படுகிறது. நவராத்திரி பிரதோஷம் நாட்களில் சுவாசினி பூஜையை சிறப்பாக நடத்துகிறார்கள்.
இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன் இந்த தீர்த்தத்தை உண்டாக்கி நீராடி சிவனை வணங்கி மோட்சம் பெற்றார் என்று தல வரலாற்றில் உள்ளது. எனவே இந்த புனித தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் ஈசன் திருவடியை நெருங்கிச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
இத்தலத்தில் விக்கிரம சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் முலோத்துங்க சோழன், குலசேகர பாண்டியன் உள்பட பல மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலயத்தில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன. கோவில் பிரகாரத்தில் தென்கிழக்கு முனையில் பிரம்மா, சிவபூஜை செய்யும் படைப்புச் சிற்பம் உள்ளது.
இத்தலத்தின் வரலாற்றை உணர்த்தும் வகையில் அந்த சிற்பம் அமைந்துள்ளது. முகப்பு மண்டபத்தின் மேல் சோமாஸ்கந்தர், சுதை சிற்பமாக காட்சித் தருகிறார். நாலாபுறமும் நந்திகள் வைக்கப்பட்டிருப்பதும் அழகுபட உள்ளது. இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் 1863-ம் ஆண்டு கற்காலத்தை சேர்ந்த கருவிகள் கிடைத்தன.
எனவே இத்தலம் உள்ள இடம் மிக, மிக, புராதன சிறப்புப் பெற்ற பகுதியாக கருதப்படுகிறது. ரிஷிகள் இத்தலத்தில் தவம் இருந்த அடையாளங் கள் உள்ளன. அதை உறுதிப் படுத்தும் ரிஷி ஓடை அருகிலேயே உள்ளது. இங்குள்ள மலை குகைகளில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படியானால் இதன் பழமை சிறப்பை புரிந்து கொள்ளுங்கள். ஆடி மாதத்தில் ஆத்மார்த்தமான பழம் பெருமைமிக்க சிவாலயத்துக்கு சென்று அழகுற அம்பாளை வணங்க வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள் தவறாமல் திரிசூலம் சென்று வரலாம். நிச்சயம் திரிபுரசுந்தரியின் அருள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக