பெரும்பாலான கைப்பேசிகளில் முன்பக்க கமெரா, பின்பக்க கமெரா என இரட்டையாக தான் கைப்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன.
ஆனால் இரட்டைத் திரை என்பது கொஞ்சம் புதுவகை மொடல் தான்.
யோட்டா ஸ்மார்ட் போன்(Yotaphone) தான் இப்படி இரட்டைத் திரையுடன் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதன் முன்பக்கம் வழக்கமான டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். பின்பக்கத்தைத் திருப்பினால் அங்கும் ஒரு திரை இருக்கும்.
இந்த டிஸ்பிளே இ-இங்க் நுட்பத்தில் செயல்படக்கூடியது. மின்நூல்களை வாசிக்க இது மிகவும் ஏற்றது, நோட்டிபிகேஷன் பெறலாம்.
மின்னஞ்சல் மற்றும் மெசேஜுகளுக்குப் பதிலளிக்கப் பயன்படுத்தலாம். விரும்பிய வால்பேப்பரையும் வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் பின்பக்கத் திரை வண்ணமயமாக இல்லாவிட்டாலும் எப்போதுமே விழித்திருக்கும்.
முன் பக்கத்தில் உள்ளவற்றைப் பின் பக்கத்துக்குக் கொண்டுசெல்லும் வசதியும் இருக்கிறது. முன்பக்கத் திரையில் கமெராவை கிளிக் செய்தால் பின்பக்கத் திரையில் ஸ்மைல் ப்ளீஸ் என்று வருவது சுவாரஸ்யம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக