|
மீன் குழம்பு, மீன் வறுவல் என சாப்பிட்டு போரடித்து விட்டதா…இதோ உங்களுக்காக சுவையான மீன் கட்லெட் ரெசிபி..சுவைத்து பாருங்கள் இதன் ருசியே தனிதான்.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா -1 கொத்து
ரஸ்க் – 4 (தேவைக்கு ஏற்ப)
முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி- புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்த பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் ரெடி!!!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக