கனடா- சஸ்கற்சுவானை சேர்ந்த ஒருவர் உட்பட்ட ஆய்வாளர்கள் குழு ஒன்று உலகிலேயே மிக பழமையான மனித புற்றுநோயாளி என கருதப்படும் ஒரவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்ட மனிதன் ஒருவரின் எலும்புகள் 4,500 ஆண்டுகளிற்கு முற்பட்டதெனவும் இவருக்கு நுரையீரல் அல்லது புரொஸ்டேட் புற்றுநோய் கண்டிருக்கலாம் எனவும் இது இடுப்பில் இருந்து தலைவரையும் உடம்பின் ஊடாக பரவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் 35-முதல் 45-வயதிற்கிடைப்பட்ட காலப்பகுதியில் இறந்திருப்பார்.
இதுவே மிகப்பழமையான புற்றுநோயாகும் என சஸ்கற்சுவான் பல்கலைக்கழக ஆய்வாளர் அஞ்ஜெலா லிவேர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதன் ஒரு காட்டுவாசி என்றும் குளிர் காலநிலையில் சூடாக இருப்பதற்கு மரங்களினால் தீ மூட்டியிருக்கலாம் என்றும் அடிக்கடி புகை உள்ளிழுக்கப்பட்டதனால் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
எலும்புக்கூட்டை முதன்முதல் கண்டதும் புற்றுநோயினால் ஏற்பட்ட அடையாளங்களை கண்டுகொண்டதாகவும் அஞ்ஜெலா தெரிவித்துள்ளார்.
இவர் தனது சமுதாயத்தில் ஒரு தனித்துவமான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் தாங்கொணா மரணவேதனை அனுபவித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SPAIN-FRANCO-MASS-GRAVES