பரிசோதனையில் சில சாதனங்கள் மேலதிக அழுக்கானவைகளாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குளியலறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஸ்மாட்போன்கள், ரப்லெட்களில் கரிம பொருட்களின் அளவை கணக்கிடும் சோதனை செய்யப்பட்ட போது அவைகளில் பெருமளவிலான நுண்ணுயிரகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மலத்திரவம் மற்றும் இ.கோலி போன்ற எதிலிருந்தாவது வந்திருக்கலாமெனவும் இது காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸ் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் குளியலறைக்கு உங்கள் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சோதனையின் ஒரு தூய்மையான வாசிப்பு 30-மதிப்பெண் என்றும் புனித ஜோசப்பில் சோதிக்கப்பட்ட சில கருவிகள் 100-ற்கும் மேற்பட்ட ஸ்கோர்களை காட்டியதாகவும், ஒருவரின் கைத்தொலைபேசி 400-ஸ்கோர்களை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்க கருவிகளின் எந்த பாகங்களில் நோய்க்கிருமிகள் பரவுகின்றன என்பது உறுதியாக கூற முடியாதென கூறப்பட்டுள்ளது.
London School of Hygiene and Topical Medicine. மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் பிரித்தானியாவில் 6-ற்கு-1 மொபைல் போன் இ.கோலி என்ற பக்ரீரியாவினால் மாசுபடுத்தப் பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மல பக்டீரியா மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் ஒருவரின் கைகளிலும், மேற் பரப்புகளிலும் நீண்ட நேரம் தங்கி இருக்க கூடியவை என்று கூறப்பட்டுள்ளது.
கிளொஸட்ரீடியம் எனப்படும் கிருமி கருவிகளில் நாட்கணக்கில் உயிருடன் இருக்க கூடியது என ஆன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை, மகசின் போன்றவற்றை மாற்று பொருட்களாக குளியலறையில் உபயோகிக்க விரும்பாது தங்கள் தொலைபேசியை உபயோகிக்க விரும்புபவர்கள் அவர்களது கைகளை கழுவியபின்னர் துணியால் துடைக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் இரசாயனப் பொருட்கள், ஸ்பிரேகளை விலக்கி வைக்கும் படி- இவைகள் எலக்ரோனிக் வகைகளிற்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/25697.html#sthash.4NA4UiU8.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக