இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் அப்பளம் இல்லாமல் எந்த உணவுகளும் பரிமாறப்படுவதில்லை.
திருமண வைபோவங்கள், திருவிழாக்கள் என எந்த நிகழ்ச்சிகளிலும் தடபுடலான விருந்து வைத்தாலும், அப்பளம் அந்த பந்தியில் பெரிய இடத்தை பிடித்துக் கொள்ளும்.
வீட்டில் கூட சிறுகுழந்தைகள் அப்பளத்தைதான் முதலில் எடுத்து சாப்பிடுவார்கள்.
ஆனால், இந்த அப்பளத்தை கூட பொரியலாக செய்து சாப்பிடலாம், ஆம் இதோ உங்களுக்காக ஒரு வித்தியாசமான ரெசிபி.
தேவையான பொருட்கள்
அப்பளம் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத் தாள் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அப்பளத்தை உடைத்து போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், உப்பு, வெங்காயத் தாள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, 1-2 நிமிடம் கிளறி, இறக்கி, கொத்தமல்லியை தூவினால் அப்பள பொரியல் ரெடி!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக