தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

அணில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அணில் ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் உண்டோ அதே மாதிரி அணில்களில் 365 வகைகள் உண்டு. ஆனால், இவை எல்லாமே குடும்பங்களில் அடங்கிவிடுகின்றன, 365 வகை அணில்கள் என்றாலும் அவற்றின் வாழ்கை முறையைக் கொண்டு நிலத்தில் வாழும் அணில், மரத்தில் வாழும் அணில், பறக்கும் அணில் என்று மூன்று வகைகளாகத்தான் விஞ்ஞானிகள் இவற்றை இனம் பிரித்துள்ளனர். அணிலின் வம்சம்


அணில் ரோடென்டியா என்னும் பெருச்சாளி வம்சத்தைச் சேர்ந்தது, இவை தோன்றி 5 கோடி வருடங்களுக்கு மேல் ஆகின்றன.
அணிலை ஆங்கிலத்தில் ஸ்குரில் என்பார்கள், இந்தச் சொல் உண்மையில் ஆங்கிலச் சொல்ல அல்ல, கிரேக்க மொழிச் சொல்லாகும்.
கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் தனது நூல்களில் அணில்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அணில் என்று அழைப்பதற்கு காரணம் என்ன?
ஸ்கிரோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு நிழல் என்று பொருள். அவுரா என்பது கிரேக்க மொழியில் வாலைக் குறிக்கும் சொல். இந்த இரண்டும் இணைந்துதான் ஸ்குரில் என்றாகிவிட்டது.
நிழலில் தனது வாலுடன் உட்கார்ந்திருக்கும் பிராணி என்ற வகையில் இந்தச் சொல்லை அரிஸ்டாட்டில் பயன்படுத்தியுள்ளார்.
அணில் பாலூட்டி இனத்தை சேர்ந்தது, இதன் கர்ப்ப காலம் 33 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையாகும், ஒரே தடவையில் அணில்கள் 4 குட்டிகள் வரை போடும்.
குட்டி பிறக்கும்போது ஓரங்குல நீளம்தான் இருக்கும். 6 முதல் 8 வாரங்களுக்கு அவற்றின் கண்கள் திறப்பதில்லை, அப்போது அவற்றிற்கு முடியும் பல்லும் வளர ஆரம்பிக்கின்றன. கண்கள் திறக்கின்றன.
அணில் தனது பற்களை மரக்கிளையைக் கொறித்து கூர்மையாக்கி கொள்கின்றது. சில நேரம் மின்சார வயர்களைக் கூட இவை கடித்து நாசம் செய்வதுண்டு.
இதனால் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டிருகின்றது. அணில் தனது பற்களை கூர்மைப்படுத்திக்கொள்ளாவிட்டால் அதன் பல் வருடத்திற்கு அரை அடி நீளம் வளர்ந்துவிடும்.
அணிலின் நன்மை, தீமைகள்
அணில்களால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு, இவை தோட்டத்தில் குழி தோண்டி நிலத்தை நாசம் செய்துவிடும், அதேபோல் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கடித்துக் குதறி சேதமும் விளைவித்து விடும்.
ஆனால் பழங்கள் காய்கறிகளுக்கு தீமை செய்யும் சிறு சிறு பூச்சிகளையும், அணில்கள் சேர்த்து விழுங்கி விடுவதால் அணிலினால் நன்மையும் உண்டு, அணிலின் ஆயுட்காலம் 6 வருடங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக