தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஜூன், 2015

இந்துதர்மத்தில் ஆறு வழிகள்!!

நம் இந்துதர்மத்தில் ஆறு சமயங்கள்(வழிகள்) உள்ளன அவை,
1,சைவம் -சிவனை வழிபடுவது.
2,சாக்தம் -சக்தியை வழிபடுவது.
3,வைணவம் -ஸ்ரீவிஷ்ணுவை வழிபடுவது.
4,காணபத்தியம் -வினாயகரை வழிபடுவது.
5,கௌமாரம் -முருகரை வழிபடுவது.
6,சௌரம் -சூரியனை வழிபடுவது.
இவற்றை பற்றிய மகரிஷியின் தத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்,
1,சைவம்:
இயக்கமற்ற நிலை அதாவது இருப்பு நிலையை லிங்க வடிவில் வழிபடுதல்.
2,சாக்தம்:
அனைத்தும் இயங்கும் நிலைக்கு தேவையான சக்தியை வழிபடுதல்
3,வைணவம்:
ஒலியையும் (சங்கு), சுழற்சியையும் (சக்கரம்) வழிபடுதல்
4,காணபத்தியம்:
ஐந்து கரத்தான் எனப்படும் வினாயகரை பஞ்ச தன்மாத்திரைகள்.…….(சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு- ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-மணம்) வழிபடுதல்
5,கௌமாரம்:
காந்தத்தின் பரிணாமமான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆக வழிபடுதல்
6,சௌரம்:
சூரியனின் ஒளியையும், வெப்பத்தையும் வழிபடுதல்.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக