தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 டிசம்பர், 2014

டெக்ஸ்டாப் கணனிகளுக்கான SoundCloud பிளேயர்

உங்கள் கைகளை அலங்கரிக்கும் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 05:58.52 மு.ப GMT ]
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் சிக்ரெட்(cicret) என்னும் பாரீஸ் நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்டை அறிமுகப்படுத்தியது.
இந்தப் பிரேஸ்லெட்டை அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம்.
இதனை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து காண்பிக்கிறது.
இதன் மூலமாக மெயில் செக் பண்ணலாம், கேம்ஸ் விளையாடலாம், அழைப்பை ஏற்கலாம், புத்தகம் படிக்கலாம்.
இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் இந்த பிரேஸ்லெட்டின் புரோமோ வீடியோ வெளியாகி லட்சக்கணக்கான நபர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது.
டெக்ஸ்டாப் கணனிகளுக்கான SoundCloud பிளேயர்
[ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 06:15.01 மு.ப GMT ]
ஒன்லைனில் ஒலிக் கோப்புக்களை தரவேற்றம் செய்து பகிர உதவும் வலைத்தளமான SoundCloud டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய பிளேயர் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மென்பொருளின் உதவியுடன் SoundCloud வலைத்தளத்திற்கு விஜயம் செய்யாமலேயே பாடல்களை கேட்ட முடியும்.
மேலும் SoundCloud கணக்கினுள் உள்நுழைந்த பின்னர் பாடல்களை தரவேற்றம் செய்தல், லைக் செய்தல், பாடல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பார்வையிடுதல் போன்ற வசதிகளை இம்மென்பொருள் தருகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளினை எனும்முகவரியில் இருந்து தரவிற்ககம் செய்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக