தமிழர் கண்டு பிடிப்பு பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார் நண்பர் சுரேஷ். இதன் விலை 249.
அவரை பற்றி அவர் நண்பர் கூறுகையில். எல்லா வகுப்பறைகளிலும் ஒரு விஞ்ஞானி சத்தமில்லாமல் உருவாகி கொண்டிருப்பான். நாம் அவனை அடையாளம் கொள்ள அவன் தனது வாழ்க்கையை அடகு வைத்து, முட்டி மோதி அவனவனாகவே வெளி வர வேண்டி இருக்கிறது.
சுரேஷ் ஒரு சாதாரன குடும்பத்தை சேர்ந்தவன். நாங்கள் எல்லாம் கல்லூரி பேருந்தில் வரும்போது, அவன் ஒரு பழைய சைக்கிளில் கல்லூரிக்கு வருவான். பரீட்சையில் மதிப்பெண் எடுக்கிறானோ இல்லையோ, நூலக புத்தகங்களில் எலெக்ட்ரானிக் சர்க்கியூட்டுகளை தேடி தேடி உள்வாங்கி கொள்வதையும், பல்லாவரம் சந்தையில் வாங்கும் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை வைத்து புதிது புதிதாக சாதனங்களை உருவாக்குவதையும் அவன் தவறவிடுவதில்லை.
கால சுழற்சியில் எங்கெங்கோ ஓடி, முட்டிமோதி ஒரு சாமானியன் படும் அத்தனை கஷ்டங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் தன்னை புதிப்பித்து கொண்டு இன்று ஒரு புதிய உருவாக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறான்.
பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும் சுரேஷை அடையாளாப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டு, நண்பனின் பயணம் தொடர வாழ்த்துகிறேன். இக்கருவி வேண்டுவோர் சுரேஷை தொடர்பு கொள்ளவேண்டிய எண் +91-98401 33363

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக