சீனா, ஜப்பான், மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளில் புத்த மதத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள். இங்கு மிகவும் பழமையான பல புத்தர் கோவில்கள் இருக்கின்றன.இவற்றில் மியான்மர் நாட்டின் மத்திய பகுதியில் பூபா என்ற எரிமலைப் பகுதியில் 5 ஆயிரம் அடி உயர மலை உச்சியின் மீது அமைந்துள்ள புத்தர் கோவில் ஒன்றாகும். இது புத்தமத துறவிகள் தங்கும் மடம் ஆகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு செல்ல 777 படிக்கட்டுகளை அமைத்து இருக்கிறார்கள். இந்த படிக்கட்டு வழியாக நடந்து சென்று கோயிலை அடையலாம். இந்த கோவில் எழிலை கண்டு புத்தரை தரிசிக்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் செல்கிறார்கள். மேலும் இங்கு ஆண்டுதோறும் சென்று வரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜாவியர் சூஸ்குன்(45) கூறுகையில், ”இந்த புனித தலத்துக்கு சென்று வந்தால் மனம் அமைதி பெறுகிறது. பள்ளத்தாக்கின் இயற்கை காட்சிகளையும், வழிநெடுக பழமரங்கள், பூஞ்செடிகள், குரங்குகள் கூட்டம் ஆகியவற்றையும் காண முடிகிறது” என்றார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக