தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 பிப்ரவரி, 2012

தமிழின் பெருமை!!


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)




தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (தமிழுக்கும் அமுதென்று) தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! (தமிழுக்கும் அமுதென்று) - பாவேந்தர் பாரதிதாசனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக