தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 பிப்ரவரி, 2012

ஆண்களின் மேல் மிக ஆத்திரம்


நீங்கள் ஆண்களின் மேல் மிக ஆத்திரம் கொண்டுள்ளீர்கள்,காரணம் நீங்களும் ஆண் என்பதால் என்றே நினைக்கின்றேன்.உங்களுக்கே நான் சொல்லவேண்டிய நிலை பாருங்கள்,மக்கள் திலகம் தவிர்ந்த அனைத்து 1960 காலத்தின் பின் வந்த நடிகர்களால்த்தான் புகைத்தல்,காதல் தோல்வி என்றால்  மதுவருந்த வேண்டும் என்ற கலாச்சாரம் பெருகியது.அதுவும் ரஜனி ஸ்ரைல் என்ற போர்வையில் புகைபிடித்தல் பெருகியது.ரசித்து ருசித்ததில் நானும் ஒருவனே.ஆண்கள் செய்வது அவர்களை தாக்கியழிப்பதுடன் சண்டைகள் உருவாகவும் வழியமைக்கிறது.அவர்களைத் திருத்தும் செயல் நடைபெறுகையில் பெண்கள் ஆண்களை விட மிக விரைவாக இவற்றில் வளர்ச்சியடைந்து விட்டனர்,ஆண்களை விட அதிகமாக பாவித்து சாதனை படிப்பதுடன் உழைக்கும் பணத்தையும் இழப்பதுடன் குறையுள்ள பிள்ளைகளை பலவீனமான பிள்ளைகளை சமூகத்துக்கு வழங்கி சமூகத்தையே அழிக்கின்றனர்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஆண்கள் குடிப்பதால்,புகைப்பதால் வரும் பாதிப்பை  விட பெண் குடிப்பதால்,புகைப்பதால் எத்தனை  மடங்கு அதிகம்??பெண்களை கவர அவர்கள் செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவது வழியல்ல,நம்ப பெண்கள் ஒன்றும் முட்டாள்களும் அல்ல.ஆண்கள் பிழை என்று பல்லாயிரம் ஆண்டாக சொல்லிவருகிறோம்.அவர்களை திருத்தவேண்டிய பெண்கள் குடித்து கூடி மாத்தி கும்மாளம் அடித்தால் நாளை இருளாதா??சமத்துவம் என்ற பெயரில் பெண்களை விபச்சாரம் செய்வதை நிறுத்துங்கள்.பஸ்ஸில் சாரதி, நடத்துனர் வேண்டும்.இருவரும் நடத்துனராக ,அல்லது சாரதியாக ஆசைபட்டால் வருவாயும் இராது,போகவேண்டிய இடத்துக்கு மக்களும் போக முடியாது.வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு உணவகத்தில் சமையல் காரர் மருத்துவரை விட அதிகம் சம்பாதிப்பது தெரியாதா??துப்பரவு செய்பவன்,உடுப்பு துவைப்பவரின் சம்பவிபரம் தெரியாதா?? ஆசிரியரின் ஊதியம் தெரியாதா?பிள்ளையை தங்க வைக்க செலுத்தும் பணம்,படிப்புக்கு செலுத்தும் கூலி தெரியாதா?இவை அனைத்தையும் வீட்டில் பெண் செய்கிறாள்.ஆண் சம்பாதிப்பதை பெண் வீட்டில் சம்பாதிக்கிறாள்.நல்ல பிள்ளைகளை சமூகத்துக்கு அளிக்கிறாள்.நல்ல சமூகம் உருவாவதால் நாடு வளமாயிருக்கிறது.இருவரும் சம்பாதிப்பதால் நான் முன் கூறிய வற்றிற்கு  அதை செலுத்தி மிகுதியை பார்த்தால் ஒருவர் செய்யும் பொது மிஞ்சியதே மிஞ்சும்.ஆனால் அன்பை பெறாமல் தனிமையில் வாடும் பிள்ளை வன்முறையாளராக உருவாகும்.சமூகம்???சமத்துவம் மனதில் இருவருக்கும் வேண்டும்.படுக்கையில் எப்படி சமத்துவம் வரும் என்று பாலச்சந்தர் அவள் அப்படித்தானில் கேட்டிருப்பார்??சொல்லுங்கள் பதில்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக