தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2012

தமிழன் எங்கு செல்கிறான் ஒரு ஆய்வு!!

Yohanna Yalini
Narumugai Devi

ஆசிரியரை ஒரு மாணவர் கொலை செய்ததும் அதை பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின..அது குறித்து பல விவாதமேடைகள் அமைத்து பல் துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள்,அறிஞர்கள்,கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டன.அந்த மாணவன் செய்தது சரியல்லஎன்பதே என் நிலைப்பாடும்.குழந்தைகளை விளையாடவோ யாருடனும் பரஸ்பரம் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ விடாமல் ,வாழ்க்கை என்பது எது என்பதையும்,இதில் வெற்றி தோல்வி சாதாரணம் என்பதை புரிய வைக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் பெற்றோர்கள் முதல் குற்றவாளிகள்.ம்திப்பெண்களை வைத்து புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் நம் கல்வித் திட்டம் மன்னிக்கவே முடியாத குற்றவாளி(அஃறிணை)அரசாங்கத்தையும் சேர்த்து தான். அந்த மாணவன் அவன் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடுதியில் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும்,அதுவும் தன் தாய்,தகப்பனைக் கண்டவுடன் கதறியதாகவும்,பிஸ்கெட்,சாக்லேட் போன்றவைகளை வாங்கிக்கொடுத்து பெற்றோர்கள் சமாதானப்படுத்தியதாகவும் வெளியான செய்திகள் நம் ஈரக்குலையை புரட்டுகிறது..14 வயது என்பதும் குழந்தை நிலையே...விடலைப்பருவம் என்று கூட சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்..ஒரு குழந்தையை குற்றவாளியாக்கும் இந்தச்சமூக சூழல் சத்தமில்லாமல் இன்னொரு மாபெரும் குற்றத்திற்கான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது... ஆம்,..இன்று ஏகதேசம் எல்லா சேனல்களும் என்றே சொல்லலாம்..சூப்பர் சிங்கர் என்கிற இசைநிகழ்ச்சிகள் ,யார் சூப்பர் டான்ஸர் (அரைகுறை ஆடைகளுடன்) என்கிற நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றன..இதில் மழலை மாறாத குழந்தைகள் பலர் பங்கேற்கின்றனர்.சில சுற்றுகளில் காதல் பாடல்கள் பாடச் சொல்கிறார்கள்..அர்த்தமே புரியாமல் அவர்களும் பாடுகின்றனர்.

அதில் பல மிகக் கொச்சையான இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களும்,முதலிரவுப்பாடல்களும் அடங்கும்.முக்கல்,முனகல் என்று பாடும் அவர்களைப் பார்த்து ஜட்ஜஸ்(?) சொல்கிறார்கள்.உன் குரலில் இன்னும் கொஞ்சம் பீலிங்ஸ் இருந்திருக்கணும்..அது மிஸ்ஸிங்.என்கிறார்கள்.அல்லது வாவ்..! உன் குரல்ல என்னமா பீலிங்ஸ் கொண்டு வந்தேடா குட்டி என்கிறார்கள்.பெற்றோர்களும் இதை ஊக்குவிக்கிறார்கள்..(கூடவே பாட்டுக்கு நடனம் ஆடியபடி) பச்சைக் குழந்தைகளை ”பச்சை பச்சையாய்”பாடவிட்டு ,ஆடவிட்டு,ரசித்துக் கொண்டிருக்கிறோம் கொஞ்சமும் கூச்சப்படாமல்...(பல பாடல்கள் வக்கிரமான வரிகளைக் கொண்டிருக்கின்றன.) நம்முடைய நாட்டில் பெரியவர்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தங்கள் அன்பைத் தெரிவிப்பது என்பது இயல்பு..அதைக்கூட இந்த நிகழ்ச்சிகள் அடித்து நொறுக்கி விடுகின்றன.சமீபத்தில் விஜய் டிவி யின் பாடல் நிகழ்ச்சியொன்றில் நடிகை அமலாபால் கலந்து கொண்டிருக்கிறார்..நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கமெண்ட் அடிக்க அவரை மெதுவாய் தழுவிப்பிரிகிறார் அமலாபால்.அடுத்து ஒரு 6வதுஅல்லது7வது படிக்கும் சிறுவன் ஒருவன் பாடுகிறான்..அவன் அமலா தொகுப்பாளரை தழுவியதும் தன் மனது வேதனைப்பட்டதாகச் சொல்கிறான்.உடனே அமலா அவனையும் தழுவுகிறார்.
.
உடனே,அந்தப்பையன் ஒரு செய்கை செய்தான் பாருங்கள் அது தான் முக்கியம்.அவன் மெலிதாய்க் கிறங்கிச் சரிவது போல் ஒரு அபிநயம்..உடனே ஒட்டுமொத்த அரங்கமும் படு ஆர்ப்பாட்டம் செய்தது.. வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம் இது..குழந்தைகளுக்குள் பாலியல் வக்கிரத்தை மூட்டுவது சரியா?ஆண்,பெண் தொடு உணர்ச்சியை இப்படி சிதைக்க வேண்டுமா?அதுவும் குழந்தைகளுக்குள்?காதலர் தினத்தன்று தாலியோடு சுற்றித்திரியும் கலாச்சாரக்காவலர்கள் கண்கள் இவற்றையெல்லாம் பார்க்காதா? அவிந்து போய்விடுமா?பலமும்,பணமும் வாய்ந்த மீடியாக்களை எதிர்த்து நிற்க வக்கில்லாமல் சாதிமதம் தகர்க்கும் சமுதாய நன்மை பயக்கும் காதலை,காதலர் தினத்தை மட்டும் எதிர்ப்பது தான் இவர்கள் கலாச்சாரத்தை(!)க் காவல் காக்கும் இலட்சணமா? #ஹேய்..நகரபாண்டிகளா.........எங்கேயடா போய்த் தொலைந்தீர்கள்?
எனது கருத்தும் கிட்டத்தட்ட பிள்ளைகளை பிள்ளைகளாக நடாத்தாமல் சுமைகளை அவர்கள் தலைகளில் பெற்றோர்,ஆசிரியரென ஏற்றி சாவடிக்கின்றனர்,கல்வியமைப்பும் அவ்வாறே.பெற்றோர் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுப்பதிலிருந்து பணம் கொடுப்பதுவரை தங்களை இலகுபடுத்துவதித்தான் உள்ளார்களே அன்றி நாளைக்கு பிள்ளைகள் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளுக்கு அவர்களை தயார்படுத்த தவறிவிடுகின்றனர்.


திடீரென செல்லமாக இருக்கும் பிள்ளையை கண்டிக்கையில் பிள்ளை தவறுகள் செய்கின்றான்.சிறுவயதிலிருந்த கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை ஊட்டி வளர்த்த பிள்ளைகள் தவறு செய்வதில்லை.இன்றைய சினிமா(தனுசின் பெரும்பாலான படங்கள்,சிம்புவின் படங்கள்...),பாடல்கள் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் வழிகாட்டியாக இல்லாமல் வன்முறையை தூண்டுவனவாக ,பெற்றோரை ஆசிரியரை,அதிகாரிகளை குறை கூறும் விதத்தில் அமைந்து அழிவுக்கு வழி கோலுகின்றன.

பிள்ளைகளின் சுதந்திரத்தையும் பெற்றோர் கட்டுப்பாட்டையும் தவறாக சித்தரிக்கின்றன,பெற்றோர் வெளியில்படும் துன்பங்களை கஸ்ரங்களை பிள்ளைகளுக்கு உணர்த்தி வருங்காலத்தில் நீங்களும் அப்படி கஸ்ரப்படக் கூடாது என்று சொல்ல தவறி,கொடுமையான கட்டுப்பாடு என்று பிள்ளைகளை கடுப்பாக்குகின்றன.பெற்றோர்,ஆசிரியர் தவறு செய்கிறார்கள் தான் ,அதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்,பிள்ளைகளை கொடுமைப் படுத்துவதாக விசத்தை பிள்ளைகள் மனதில்  விதைக்காதீர்கள். பெற்றோர் வழிகள் தவறு,ஆனால் நோக்கம் பிள்ளைகளை உயர்வில் காண்பதே.
பிள்ளைகளை தெருவில் விட்டால் கண்ணியமற்று,கட்டுப்பாடற்று நாடே நாசமாகிவிடும்.வழியை காட்டுங்கள்,தவறை திருத்துங்கள்.இளையோர் கையில் உலகம்,மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்று உசுப்பேத்தி மேலும் அழிவை கொண்டுவராமல் அப்பா உழைத்தால் தான் மாணவனுக்கு சாப்பாடே என்பதை புரிய வையுங்கள்.தோணி படம் கூட பிள்ளையின் திறமையின் அடிப்படையில் வளர்க்கவா சொன்னது,ஆசையின் அடிப்படையில் அல்லவா!?தகுந்த துறையில் படித்தால்த்தான் வாழலாம்.அது வேலையில்லாமல் சீரழிந்தால் புரியும்.
ஆசிரியர் பிள்ளையின் தகுதியை கணித்து அத்துறையில் கற்க  சிபார்சு செய்தல் கட்டாயமாக்கப் படவேண்டும். பெற்றோர் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி கஷ்ர நஸ்ரங்களை,இன்பதுன்பங்களை அறியவேண்டும்.அரசு ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள முறைபோல அனைத்து தொழிலையும் பதிவு செய்து உரிய ஊதியம் வழங்கவும் ஓய்வூதியம் வழங்கவும் சட்டம் உருவாக்கவேண்டும்.சிறுவர் நிகழ்ச்சிகள் வர்த்தக ரீதியில் தொலைக்காட்சிகளில் நிகழாமல் தடுப்பதுடன் சிறுவர் நிகழ்வாகவே நடாத்தப்பட வேண்டும். 
"நேற்று ராத்திரி  யம்மா" போன்றமாதிரியான பாடல்களை பிள்ளைகள் பாடாமல் பெற்றோர் பார்க்கலாம்,அதில் உள்ள உணர்ச்சிகளை சொல்லிக்கொடுக்கையில் பிள்ளைகளை அத்திசைக்கு அழைத்து செல்கிறார்கள்.அவற்றை நியாயப் படுத்துகிறீர்கள்.பின்னர் மறுக்கையில் சாவுகள்,கொலைகள்,தற் கொலைகள் என நீள்கின்றது.எனவே வருமுன் காப்போம்!!நன்றி!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக