தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

"கிரெம்ளின் மாளிகை" என தமிழில் ரஷ்ய நாடு தமிழைக் கொண்டாடுகிறது!!


தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான இருப்போம் . நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம் .அந்த அளவு போய்விட்டது நம் மொழி .

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷ்ய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷ்ய மொழியிலும் , இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும்,உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் கரணியம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆருமொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ் தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள். மேலும் அங்கே வைக்கப் பட்டுள்ளப் அறிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று


வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ' தமிழை காப்பாற்ற கருத்தரங்கு நடத்தி கொண்டிருக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக