தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு!!


`உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு' என்பது ஒளவையார் மொழி.
ஒவையார் கம்பருக்கு நிகராக கவிப்பாடும் வல்லமை படைத்தவர். ஆனாலும் கம்பரைப்போல் பொன்னுக்குக் கவிப்பாடாமல் கூழுக்கு கவிபாடிய எளிமையின் நாயகி.

சிலம்பி என்னும் தாசியிடம் பொன் வாங்கிக் கொண்டு பாதி பாடல் மட்டுமே பாடினார் கம்பர். மீதி பாடலை முடிக்க இன்னும் கொஞ்சம் பொன் கேட்க, அந்தப் பெண்ணிடம் பொன் இல்லை. ஆகையால் சுவற்றில் பாதியோடு நின்றது கம்பர் எழுதிய கவிதை. அவ்வழியாக பிரிதொரு நாள் வந்த ஒவையார் சுவரில் எழுதப்பட்டிருந்த கவிதை குறித்து அப்பெண்ணிடம் கேட்க, அப்பெண் காரணத்தை தெரிவித்தாள். ஒவையார் அவள் வீட்டில் பசிக்கு கூழ் வாங்கிக் குடித்து விட்டு அக்கவிதையை முழுமையாக பூர்த்தி செய்து விட்டுப் போனார்.

அந்த வழியாக மறுபடியும் வந்த கம்பர், ஒவையாரால் பூர்த்தி செய்யப்பட்டிருந்த கவிதையைக் கண்டு கோபம் கொண்டார். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அவர் ஒரு நாள் சிலேடையாக `நாலிலைப் பந்தலடி' என்று டி போட்டு பாட கோபம் கொண்ட ஒவையார்,
எட்டேகால் லட்சணமே எமனேரும் பரியே...எனத் தொடங்கும் அந்தப் பாடலில் கம்பரை அவலட்சணமே, குட்டிச்சுவரே, குரங்கே, எருமைமாடே என்றெல்லாம் திட்டிவிட்டு `ஆரையடா... சொன்னாய் அது' என்று பதிலுக்கு` டா' போட்டு பாடியவர்.
அப்படிப்பட்டவரா பெண்களை குறைத்து சாப்பிடு என்று கூறியிருப்பார்?
ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்குகேலென்றாய் ஏலாய்
ஒருநாளும் என்நோயறியாய்
இடும்பைகூர்ரென்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது
என்று பசியெடுக்கும் வயிற்றின் மீதே நொந்துக்கொள்கிறார்.
மற்றொருப் பாடலில் `நாழி அரிசிக்கே நாம் ' என்பவர், தகுதி இல்லாதவரையும் வயிற்றுக்காக பாராட்ட வேண்டியுள்ளது என்று வேதனையை வெளிப்படுத்துகிறார்.
வறுமையோடு வாழ்ந்தாலும் வற்றாத கவி வளம் படைத்த பெண்ணின திலகம் ஒவையார் உண்மையில் `உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு' என்றுதான் கூறியிருக்க வேண்டும்.
பண்டி என்பது வயிற்றைக் குறிக்கும்.
வயிறு இருபாலருக்கும் பொதுவானது. ஆண், பெண் இருபாலருமே அளவோடு சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதைத்தான் ஒiiவாயர் இப்படி கூறியிருக்க வேண்டும்.
ஓலைச்சுவடியில் இருந்து அச்சேற்றும் போது இந்தத் தவறு நடந்திருக்க வேண்டும்.
இனி
உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என்றுதான் வாசிக்க வேண்டும்
****பேச்சுவழக்கில் பண்டி என்பது பன்றி ,பண்டிக்கு இன்னொரு பெயராக வயிறு இருக்கலாம்,ஆனால் பெண்டிர் என்பது மானிடரை குறிக்கும் என்பதாகவே நானறிகிறேன்,இங்கு ஔவை பெண்களை இகழவில்லையே,அழகு பற்றித்தானே சொல்கிறார்.எத்தனையே புரியாத பழமொழிகளை ஆராயாது தெரிந்த விடயத்தில் பிழை காண்பதால் முட்டாள் என்ற பெயரே மிஞ்சும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக