தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, February 26, 2012

தீண்டாமை பற்றி புத்தர்!!


ஒரு நாள் கெளதம புத்தர் காட்டு வழியாக வெயிலில் நடந்து களைத்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.., இதை கவனித்த ஒரு ஆடுமேக்கும் சிறுவன் அவரை சுற்றி மரகிளைகளை நட்டு, ஆட்டின் மடிக்காம்பை கறந்து அவர் வாயில் சில பால் துளிகளை விழவிட்டான். அந்த பால் தொண்டையில் விழுந்ததும் கெளதமர் கண் விழித்து, தனது திருவோட்டில் கொஞ்சம் பாலை கறந்து தரும்படி கேட்டார். தான் தீண்டாதவன் என்பதால் சிறுவன் மறுத்தான். சாதிவேற்றுமையைஎண்ணி, வருந்தி இவ்வாறு கூறினார்.

"இடர் வரும்போதும் உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன்பிறந்தவர்போல் மாந்தர்
உறவு கொள்வர் அப்பா..!"

"ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் சாதி
தெரிவதுண்டோ அப்பா..!"

"எவர் உடம்பினிலும் சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே
இயற்கை குணமப்பா..!"

"பிறப்பினால் எவர்க்கும் உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் நல்ல
செய்கை வேண்டுமப்பா..!"



**அப்படியானால் கண்ணன் தீண்டத்தகாதவன்!!வள்ளி??பாரதத்தில் சத்தியவதியால் வந்த பரம்பரை அனைத்துமே தீண்டத்தகாதவர்கள்தானே!!

No comments:

Post a Comment