தமிழர்கள் அனைவரும் இந்தி மட்டும் கற்பதனால் வரும் ஆபத்துக்கள் - இது ஆங்கிலம் மட்டும் கற்பவர்களுக்கும் பொருந்தும்
1. தமிழ் பெயர்கள் அனைத்தும் இந்தி பெயர்களாக மாற்றப்படும் .- இது ஏற்கனவே நடந்தேறி வருகிறது.
2. தமிழ் பெயர் பலகைகள் முற்றிலும் மறைந்து ஹிந்தி மொழியிலும் பெயர் பலகைகள் காணப்படும்.
3. ஹிந்தியர்கள் சுதந்திரமாக தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் பயணித்து வியாபாரம் செய்வார்கள் .
4. ஹிந்தி வழிக் குடும்பங்கள் சாரை சாரையாக தமிழ்நாட்டில் குடியேறுவார்கள். அதனால் ஹிந்தி வழி பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கும்.
5. ஹிந்திய அரசியல் தொகுதிகள் தமிழ் நாட்டில் உருவாகி ஹிந்திய அரசியல் வாதிகள் ஆங்கங்கே வெற்றி பெற்று ஆட்சியும் செய்வார்கள்.
6. அனைவருக்கும் ஹிந்தி எழுத படிக்க தெரியும் என்ற நிலையில் , அனைத்து வியாபாரம் , அலுவலக ஆவணகளும் ஹிந்தி மொழியில் பதியப்படும்.
7. தமிழ் சினிமாத் துறை நலிவடையும் . ஹிந்தி சினிமாக்கள் இனி பட்டி தொட்டியெல்லாம் திரையிடப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டும் .
8. வணிக வளாகங்கள் , சுற்றுலாத் தளங்கள் , வழிபாட்டுத் தளங்கள் ஹிந்தியை தான் முதலில் பயன்படுத்தும் . கர்நாடகாவில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
9. அரசு அறிவிப்புகள் ஹிந்தி மொழியிலும் வெளிவரும் , இது ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு எளிமையாகிவிடும்.
10. பெயரளவில் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படும் . எழுதாத சட்டமாக எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் இருப்பது போல் இனி எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்தி என்கிற நிலைமை தமிழ்நாட்டில் நிச்சயம் உருவாகும்.
இத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும், ஹிந்தி மக்கள் இந்தியாவில் எங்கும் சிரமமின்றி வாழ வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு தான் இந்திய அரசு பிற மாநிலங்களில் ஹிந்தியை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது.
இந்த இழிநிலை வரக் கூடாது என்பதற்காக தான் தமிழர்கள் நாங்கள் போராடுகிறோம். ஆகவே தமிழர்கள் அனைவரும் இந்த சூழ்ச்சியை கருத்தில் கொண்டு உங்கள் தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து , ஹிந்தி திணிப்பை முடிந்த வரை எதிர்க்க போராடுங்கள் . இல்லை என்றால் உங்கள் கண்முன்னே உங்கள் தாய் மொழி சீரழிந்து போவதை நீங்கள் உறுதியாக காண்பீர்கள்.
***** சமச்சீர் கல்வியும் - கட்டாய இந்தி திணிப்பும்.
நேற்று என் குழந்தையை ஐந்தாம் வகுப்பில் சேர்பதற்காக ஒரு மெட்ரிக் பள்ளிக்கு சென்று விசாரித்தேன். அவர்கள் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது என் குழந்தை இரண்டாம் பாடமாக தமிழ் மொழியை தேர்வு செய்தால் மூன்றாவது பாடமாக கட்டாயமாக ஹிந்தி மொழி பயில வேண்டுமாம். இது அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் உள்ள அரசு ஆணை என்றி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகிறார். நாம் மூன்றாம் மொழி எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்ன போது , அப்படியானால் உங்களுக்கு பள்ளியில் இடமில்லை என்று அனுப்பிவிட்டார்.
இதை மேலும் விசாரித்த போது சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகப் படுத்திய பின் பல மெட்ரிக் பள்ளியில் இந்த கட்டாய ஹிந்தி மூன்றாம் பாடம் திணிக்கப்படுகிறது என்ற உண்மை புலனாகியது. இதனால் தமிழக மாணவர்களுக்கு மும்மொழி பாட சுமை . எதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து உயிர் தியாகம் செய்தோமோ அதன் தியாகமே இன்று வீணானது .
இதை நாம் சட்டரீதியாக சந்திக்க வேண்டும் என முனைகிறோம். தோழர்களுக்கு இது குறித்து மேலதிக தகவல் தெரிந்தால் எங்களுக்கு உதவுங்கள் . மும்மொழி கட்டாய பாடம் என்று அரசாணை இருக்குமென்றால் அந்த ஆணையின் நகல் கிடைத்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தமிழர் பண்பாட்டு நடுவம் இந்த நேரிடி இந்தித் திணிப்பிற்கு எதிராக போராடுவோம் என உறுதி அளிக்கிறோம்.
ராஜ்குமார் பழனிச்சாமி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக