தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 22, 2012

உண்ணாவிரதம் மேற்கொண்டால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் !!

மீண்டும் நாஸ்தீகம் தோற்றது,இந்துமதம் ஒரு விஞ்ஞான கலைக்கூடம்  என்பது உறுதியானது.
உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.
எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணா நோன்பு இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
மேலும் இவர்கள் நீண்ட நாள் உயிர் வாழமுடியும் என தெரியவந்துள்ளது. ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது.
குறைவான அளவு உணவு சாப்பிடுவதால், மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன.
இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு, எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது.
மேலும் அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம்.

No comments:

Post a Comment