தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 24, 2012

தமிழகத்தின் முதலமைச்சர்கள்!!!




                        தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.


இதுதான் கோமளவல்லி (ஜெயலலிதா ஜெயராம்). தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் ஜெயலலிதாவின தாத்தா குடும்பமும். அவர் இந்த ஊர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.
இவரது அன்னை சந்தியாவும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். சென்னையில் இவரது பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் கிட்டின. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஜெயலலிதா எம். ஜி. யாருடன் நடித்தபோது அவரது இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார்.
பின்னர், அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு பிறகு 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989 முதல் 1991வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார். 2011 இல் தமிழக முதல்வராக 3 வது முறையாக தேர்வு ஆகியுள்ளார்

No comments:

Post a Comment