தேவையான பொருட்கள்
சிவப்பு வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை
செய்முறை
• வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள்.
• பச்சை மிளகாயை நீரில் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் சிவப்பு வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, தயிர், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்கள்.
• மிகவும் சுவையான வெங்காய சம்பல் ரெடி.
குறிப்பு
* மிளகை உடனே அரைத்து போட்டால் சுவை அதிகமாகும்.
* பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு நிற மிளகாயும் சேர்க்கலாம். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக