தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஜூலை, 2015

வயதான காலத்தை இனிமையாக கழிக்க உதவும் இளம் வயது நட்பு!


மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
இவற்றில் சிலரது நட்பு ஆரோக்கியமானதாகவும், சிலரது நட்பு ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் இளம் வயதினரின் நட்பானது வயதான காலத்தில் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவிலுள்ள Rochester பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்காக 20 வயதை அடைந்த பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் 30 வயதை அடையும் வரை கண்காணிக்கப்பட்டுவந்தனர்.
ஆரம்பத்தில் இவ் ஆய்வில் 222 பேர் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் ஆய்வு முடிவடையும் தருணத்தில் 133 நபர்களே கண்காணிக்கப்பட்டிருந்தனர்.
இவ் ஆய்வின் முடிவில் நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தை செலவிடுபவர்கள் தமது பின்னைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக