படையையே நடுங்க வைக்கும் பாம்புகளுக்கு கால்கள் இல்லை என்றே அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
ஆனால் முதன் முறையாக நான்கு கால்களைக் கொண்டுள்ள பாம்பினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 19.5 சென்ரி மீற்றர்கள் நீளமான படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த படிமம் 113 மில்லியன் வருடங்கள் பழைமையானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
இக் கால்கள் இடம்பெயருவதற்காக அன்றி இரைகளைப் பற்றிப்பிடிப்பதற்காக குறித்த பாம்புகளுக்கு உதவியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதேவேளை பாம்புகள் கடல் வாழ் ஊர்வன விலங்குகளில் இருந்து கூர்ப்படைந்து இருக்கலாம் எனும் புதிய கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக