தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2015

உலகின் முதலாவது மலேரிய தடுப்பூசி விரைவில் அறிமுகம்!

உயிர்களைக் கொல்லும் கொடிய மலேரிய நோயிலிருந்து மில்லியன் கணக்கான மக்களை காப்பாற்றும் முயற்சி முதன் முறையாக ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளது.
அதாவது மலேரிய நோயிலிருந்து பாதுகாப்பை தரக்கூடிய Mosquirix எனும் தடுப்பூசியினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுடன், இத் தடுப்பூசியானது European Medicines Agency (EMA) இனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக உலக சுகாதார நிறுவனத்தினால் (World Health Organisation) பரிசீலிக்கப்பட்டு அதன் அனுமதியினைப் பெறும் கட்டத்தில் காணப்படுகின்றது.
இத் தடுப்பூசியினை 6 மாதம் தொடக்கம் 17 மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கும் பயன்படுத்த முடியும் என European Medicines Agency தெரிவித்துள்ளது.
இதேவேளை 2013 ஆம் ஆண்டின் தரவுகளின்படி இந்நோயினால் 584,000 வரையானவர்கள் இறந்துள்ளதுடன், இவற்றில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 5 வயதிலும் குறைவான குழந்தைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக