இது உலக புகழ் பெற்ற கைலாசநாதர் ஆலயம். எல்லோரா வில் அமைந்துள்ளது. இது யாரால் கட்டப்பட்டது என்பது மிகவும் புதிராக உள்ளது. இது கற்களைக் கொண்டு அடுக்கி கட்டப்பட்டது அல்ல. மிகப்பெரிய மலையை அப்படியே செதுக்கி கட்டப்பட்டது. உலகத்திலேயே ஒரு முழு மலையைக் கொண்டு இவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவில் இது ஒன்றுதான். 18 வருடத்திற்கும் குறைவாக இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர். மொத்த மலையையும் இவ்வாறு செதுக்க 4,00,000 டன் கற்களை வெட்டி எடுக்க வேண்டும். அதாவது இவ்வளவு கற்களை 18 வருடத்திற்குள் வெட்டி எடுக்க வேண்டுமெனில் 22,222 டன் கற்களை ஒவ்வெரு வருடத்திற்கும் வெட்டி எடுக்கவேண்டும் (4,00,000/18=22,222). அதாவது 60 டன் கற்களை ஒவ்வெரு நாட்களுக்கும்(22,222/365=60), 5 டன் கற்களை ஒவ்வெரு மணி நேரத்திற்கும்(வேலைநேரம் 12 மணி நேரம் எனில் 60/12=5) வெட்டி எடுக்க வேண்டும். இது. தற்போது இருக்கும் தெழில் நுட்பத்தில் கூட சாத்தியமில்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிவர். அதாவது இந்த கணக்கானது மலையிருந்து கல்லை வெட்டி எடுக்க மட்டும் போடப்பட்டது. அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை. எனவே இது மனிதனால் சாத்தியப்பட இயலாத ஒன்று வேறு சக்தியின் உதவியுடன் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1682 ஆண்டு இஸ்லாமிய மன்னரான ஔரங்கசிப் இந்த கோவிலின் ஒரு தடயம் கூட இருக்கக்கூடாது என அதை முழுமையாக அழிப்பதற்காக 1000 வேலையாட்களை அமர்த்தினார்.. ஆனால் அவர்களால் 3 வருடம் முயற்சி செய்தும் ஒரு சில சிலைகளை உடைக்கவும் சிதைக்கவும் மட்டுமே செய்ய முடிந்ததோ ஒழிய அதை அழிக்க முடியவில்லை.
This is Ellora kailasa temple.It is in aurangapath district in maharashtra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக