பாலை பகலிலும் அருந்தலாம், இரவிலும் அருந்தலாம், ஆனால் உணவு உண்ட பிறகுதான் குடிக்க வேண்டும்.
பாலைக் குடிக்கும்போது அமைதியாகவும் சிறுகச் சிறுகச் சுவைத்து குடிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அவ்வாறின்றி மளமளவென குடிப்பது மற்றும் பெரும் அளவில் விழுங்குவது ஆகியவற்றால் வயிற்றில் செரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.
பாலுடன் சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பதால், சர்க்கரை பாலின் தன்மையைக் கெடுத்து, அதை இரைப்பையில் புளிக்கும்படியும் வாய்வு உண்டாகும்படியும் செய்கிறது. அதனால் சர்க்கரை சேர்க்காமலே குடிப்பது நல்லது.
களைப்பு, மயக்கம், சுவாச காசம், அதிக தாகம், பசி, இரத்தக் குறைவு இவற்றையெல்லாம் பசும்பால் எளிதில் குணப்படுத்தும்.
பாலில் 101 வகை நன்மை தரக்கூடிய பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாலில் புரோட்டின் அதிகமாக உள்ளது. இது உடலின் திசு உற்பத்திக்கும், பராமரிக்கும் உதவுகிறது.
எலும்புகளுக்கு உரமூட்டும் கால்சியமும், உடலில் அதிக அளவில் செல்கள் உற்பத்தியாவதற்கும் பாஸ்பரசும் போதிய அளவு இந்த பாலில் இருக்கிறது.
உடலின் சூட்டை பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.
பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா. அதுதான் கொழுப்பு. பாலிலுள்ள கொழுப்புப் பகுதியைப் பிரித்தெடுத்து வெண்ணையாகவும், நெய்யாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக