தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜூலை, 2015

தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேருங்கள்!


ஆரோக்கிய வாழ்க்கை வழங்குவதில் காய்கறிகளும், கனிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அவ்வாறு எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பவை பற்றி பார்ப்போம்,
தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.
கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.
புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சிய சத்துக்கள் உள்ளன.
பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.
வெண்டைக்காய்: மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன.
அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.
முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.
சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.
கருணைக்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் செய்கிறது.
வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.
வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.
உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக