தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 ஜூலை, 2015

தானாக செயலிழக்கும் வாகனங்கள்: பெண் ஆவியின் செயலா?


கர்நாடகாவில் உள்ள அணைகளுள் முக்கியமானது மர்கொனஹள்ளி அணை.
தும்குர் மாவட்டத்தின் குனிகல் தலுக்காவில் உள்ள இந்த அணை சிம்சா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது.
இந்த அணை மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்த நான்காம் கிருஷ்ணராஜா வதோதயரால் 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த அணை கட்டப்பட்ட தொழிற்நுட்பங்கள் மூலம் தன்னை தானே அணை சுத்தம் செய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்த அணையின் இயற்கைக்கொஞ்சும் அழகின் காரணமாக ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.
ஆனால் இந்த அணையை சுற்றியுள்ள பகுதியில் ஒருவிதமான அமானுஷ்ச சம்பவம் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறது.
அதாவது இந்த அணையை கடக்க முயற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் செயலிழப்பதாக கூறப்படுகிறது.
பலர் இவ்வாறு தங்கள் வாகனம் நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதன் பின்னர் வாகனம் மீண்டும் செயல்பட பெங்களூரு வரை தள்ளிக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த குறிப்பிட்ட இடத்தில் முதிய பெண்மணி ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அங்கு வாகனங்கள் நின்றுவிடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே இரவு வேளைகளில் அந்த பகுதியில் தனியாக செல்வதை பலரும் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக