தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஜூலை, 2015

பூமியை போல் இருக்கும் இன்னொரு பூமி: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் தகவல் (வீடியோ இணைப்பு)

பூமியை போன்றே அமைப்புகள் உள்ள மற்றொரு கிரகத்தை பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.

கெப்லர் 452b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகத்தை பூமியின் இரட்டை சகோதரன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
மேலும் கெப்லர் 452b தான் அதனுடைய நட்சத்திர குடும்பத்திலேயே சிறிய கிரகம் என கூறப்படுகிறது. எனினும் பூமி எவ்வளவு தொலைவில் இருந்து சூரியனை சுற்றுகிறதோ அதே தொலைவில் இருந்து கெப்லர் 452b அதனின் நட்சத்திரத்தை சுற்றிவருகிறது.
மேலும் அதனின் நட்சத்திரமும் பூமியை போலவே உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிரகம் பூமியை விட 60 சதவீதம் பெரியது, என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் பூமிக்கு 1400 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதனையும் சேர்த்து 1030 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வான் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக