சுத்தம் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
அந்தவகையில், நாம் நாள்தோறும் கடைபிடிக்கும் அடிப்படை விடயங்களில் ஒன்றான எப்போதெல்லாம் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பார்ப்போம்.
கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.
• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.
• வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
• கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
• சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள்.
• காயங்களுக்கு மருந்திடும் முன்பும், பின்பும், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் முன்பும், பின்பும் கைகால்களை சுத்தம் செய்வது நல்ல பழக்கம்.
• பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தினாலும், குழந்தைகளை தூக்கும் முன்பாகவும் கை கழுவுவது அவசியம்.
• கை கழுவியவுடன் உலர்ந்த துண்டால் கைகளை துடைப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழி.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக