தேவையான பொருட்கள்
ஆட்டு மூளை - 2
மிளகாய்துதூள் / 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஆட்டு மூளையின் மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும், அடிக்கடி மூளையை புரட்டி போடவேண்டும், இல்லாவிட்டால் அடியில் பிடித்துவிடும்.
மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயத்தி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும், வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் கொட்டி மிகவும் மெதுவாக கிளறவேண்டும், நன்றாக சிவந்தவுடன் இறக்கி பரிமாறலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக