தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 ஜூலை, 2015

மனிதர்கள் முத்தமிடுவதன் காரணம் தெரியுமா? (வீடியோ இணைப்பு)

மனிதர்கள் முத்தமிடுவது எதற்காக என்பது குறித்து 168 பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
வெறும் 46 பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்களே காதலைத் தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள்.
முந்தைய ஆய்வுகளில் 90 சதவீதம் பேர் முத்தமிடுவதாகத் தெரியவந்தது. ஆனால், இந்தப் புதிய ஆய்வில், பெற்றோர் குழந்தைகளை முத்தமிடுவது போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக்கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.
 
பெரும்பாலான சமூகங்களில் இம்மாதிரி முத்தம் என்பதே கிடையாது. அம்மாதிரி விருப்பமும்கூட அவர்களுக்குக் கிடையாது. பிரேசிலில் இருக்கும் மஹினகு என்ற இனத்தினர் முத்தமிடுதலை மிக மோசமான செயலாகக் கருதுகிறார்கள்.
வேட்டையாடி உணவைச் சேகரிக்கும் சமூகங்களில் முத்தமிடுதல் என்பது கிடையாது.
நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இப்போதும் வாழ்வது இப்படியான வேட்டைச் சமூகங்கள்தான். ஆகவே, நம் மூதாதையர்களும் முத்தமிட்டிருக்காமல் இருந்திருக்கக்கூடும்.
முத்தமிடுவது எல்லா மனிதர்களிடமுமே இருக்கும் வழக்கம் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு புரட்டிப்போட்டிருக்கிறது என்று லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான்கோவியாக் தெரிவித்திருக்கிறார்.
நாம் இப்போது முத்தமிடுவதைப் போல முத்தமிடுவது என்பது ரொம்பவுமே சமீபத்திய பழக்கம்போலத் தெரிகிறது என்கிறார் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஃபேல் வ்லோடார்ஸ்கி.
முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை ஆராய்வதற்காக அவர் பல ஆவணங்களை ஆராய்ந்தார்.
3,500 வருடங்களுக்கு முந்தைய, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரின் ஆன்மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், எகிப்திய சித்திர எழுத்துகளில் ஆட்கள் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதே தவிர, உதட்டோடு முத்தமிடும் காட்சிகள் இல்லை.
2013ல் முத்தமிடுதல் குறித்து வ்லோடர்ஸ்கி விரிவாக ஆராய்ந்தார். ஒருவரை முத்தமிடும்போது, எது முக்கியம் எனப் பலரிடம் அவர் கேட்டார்.
அவர்களிடமிருந்து வரும் வாசனைதான் மிக முக்கியமான விடயமாக இருந்தது.
தற்போது மனிதர்கள் முத்தமிடும் முறை மிக சமீபத்தில் உருவான முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கரடிகள் துணையை ஈர்க்க பெரோமோன் என்ற வாசனையை வெளியிடுவதைப் போல, ஆண்களின் வியர்வையிலும் அம்மாதிரியான வாசனை இருக்கிறது.
பெண்கள் இந்த வாசனையை நுகரும்போது, அவர்களுடைய பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது.
ஆக மற்றொருவரின், வாசனையை உணர முத்தம் என்பது பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வழிமுறையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக