வாரணாசி கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள வட இந்திய நகரமாகும்.
வாரணாசி கி.மு.11ம் நூற்றாண்டில் (3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) உருவாக்கப்பட்டது என்று, வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.
இங்கு புனித நதியான கங்கை ஓடுவதும் அதனை ஒட்டிய தெரு நெடுக 2 ஆயிரம் கோவில்கள் உள்ளதும் சிறப்பு. இந்த கோவில்களில் ஒன்றாகத்தான் காசி விசுவநாதர் தங்க கோவிலும் உள்ளது.
வாரணாசி நகரம் காசி, பனாரஸ் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பனாரஸ் பட்டுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
கங்கையில் புனித நீராடுவதுக்கும் இறந்தவர்களுக்கான ஈமச் சடங்குகள் செய்வதுக்கும் இங்கு அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநில தலைநகரான லக்னோவுக்கு, தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்தில் வாரணாசி உள்ளது.
இந்தியாவின் சப்தபுரி என்ற ஏழு புனித நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இது இந்துக்களைப் போல ஜெயின்களுக்குமான புனித நகரமாகவும் திகழ்கிறது. புத்த மதத்தை பரப்புவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வாரணாசியில் மரணம் சம்பவித்தால், அதன் பிறகு அந்த ஆன்மா ஒரு நல்ல நிலையை அடைவதாக நம்பப்படுகிறது.
மக்கள் தொடர்ந்து வசித்துவரும் உலகின் பழமையான ஒரு சில நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
சிவனை வழிபடும் பக்தர்களுக்கு மட்டுமே முன்பு வாரணாசி முதன்மையிடமாக விளங்கியது, வேதங்களின் பிற்காலத்தில் இது பிரபலமடைந்துள்ளது.
காசியின் மகாராஜா நரேஷ் காசிதான் வாரணாசியின் கலாச்சாரத்துக்கு வித்திட்டவர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உலகில் தோன்றியுள்ள முக்கியமான மதங்களுக்கெல்லாம் முன்பே ஆன்மிகத்தில் வாரணாசி சிறந்து விளங்கியுள்ளது.
கவுதம புத்தர் தனது புத்தமதத்தின் முதல் ஆன்மிக பிரசங்கத்தை வாரணாசி அருகில் உள்ள சாரநாத்தில்தான் ஆரம்பித்தார். மேலும், வாரணாசியில்தான் பெனாரஸ் கரணா என்பவர் ஹிந்துஸ்தானி இசையை முதன்முதலில் உருவாக்கினார்.
வாரணாசியில் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள்:
ஜந்தர் மந்தர், ராம் நகர் கோட்டை, காசி விஸ்வநாதர் கோவில், பல்கலைக்கழகங்கள் தாஷாஸ் கேட், மணிகர்னிகா கேட், ஆஸ் கேட், கோவில்கள், மசூதிகள். ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜனனம் அஸ்தம் ஆகியவையாகும்.
வாரணாசி பல்கலைக்கழகங்கள்:
இங்கு இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி காசி வித்யாபித், இந்தியன் தொழிற்கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.), சம்புமானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகம், திபெத்தியர்கள் கல்விக்கான மத்திய பல்கலைக்கழகம் என பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன.
காசி விசுவநாதர் கோவில்:
காசி விசுவநாதர் கோவிலின் தற்போதுள்ள அமைப்பு 1780 ம் ஆண்டு மகாராணி அகில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலின் முன்புறம் உள்ள கோபுரம் 1785 ம் ஆண்டு நவுபத்கனா என்பவரால் அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரான் ஹேஸ்டிங் முன்னிலையில் கட்டப்பட்டது.
1839 ம் ஆண்டு பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங் அன்பளிப்பால் இந்த கோவிலின் முக்கியமான இரண்டு குவிமாடங்களுக்கு தங்கக் கூரை வேயப்பட்டது.
ஜந்தர் மந்தர்:
ஜந்தர் மந்தர் ஆய்வு மையம் 1737 ம் ஆண்டு கங்கை ஆற்றின் மலை வழிகளில் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் இங்கு ரசிப்பதுக்கு பல சுவாரஸ்யங்கள் உண்டு.
பாரத மாதா கோவில்:
இந்தியாவில் பாரத மாதாவுக்காக உள்ள ஒரே கோவில், வாரணசியில் மகாத்மா காந்தி காசி வித்யாபித் வளாகத்தில் உள்ள இதுதான். இது பாபு சிவ பிரசாத் குப்தாவால் கட்டப்பட்டது. 1936 ம் ஆண்டு காந்தியடிகளால் திறக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் மனதை மகிழ்விக்கும் கண்கவர் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இன்னும் பல இடங்கள் வாரணாசியில் உண்டு.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக