ஜேர்மனியில் பெண்களுக்கு மட்டும் வாகனம் நிறுத்துவதற்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் ஃப்ராங்ஃப்ர்ட் விமான நிலையம் புதிதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் விமான நிலையத்தின் அருகாமையிலே பெண்கள் மட்டும் வாகனங்களை நிறுத்த வழி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாகனம் நிறுத்துமிடத்தில் வண்ண குறியீடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், பெண்கள் தங்களது வாகனத்தை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என கூறியுள்ளனர்.
வாகனம் நிறுத்துவதில் பெண்கள் அதிக அளவில் தவறு செய்து வருவதை இது மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஆனால், சுரங்கப்பதைகளில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு மட்டுமான கார் நிறுத்தும் பகுதிகளை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பொதுவாக அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் எவ்வித சிக்கலுமின்றி பெண்கள் பயன்படுத்தலாம் எனவும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை நிறுவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்பை உணரவும் முடியும் என்று கூறியுள்ளனர்.
பெண்களுக்கு மட்டுமான இந்த வாகன நிறுத்துமிடங்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும், சிலர் இதை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாளிதழ் ஒன்றின் ஆசியரான Geraldine Herbert என்பவர் கூறுகையில், இந்த வாகனம் நிறுத்துமிடம் பார்ப்பதற்கு குறுகிய அளவில் இருப்பதால், தவறான நோக்கை ஏற்படுத்துகிறது.
உதாரணத்திறகு, ஆபாசமான வாகனம் நிறுத்துமிடம் போல் காட்சியளிக்கிறது, பெரிய மற்றும் சிறிய அளவிலான கார்களை பெண்கள் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் இது உகந்த இடமாக தெரியவில்லை, தற்போது இந்த வாகனம் நிறுத்துமிடம் பெண்களின் பாதுகாப்பா? அல்லது வாகனம் நிறுத்துமிடத்தை ஆபாசமாக காட்டியுள்ளதா? என சர்ச்சைகள் எழுந்துள்ளன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக