தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஜூலை, 2015

வசிப்பதற்கு ஆனந்தம்...பார்ப்பதற்கு பிரம்மிப்பு: உலகின் அசத்தலான வீடுகள்

ஒவ்வொரு துறைகளுமே புதுமையை நோக்கி பயணிக்கின்றன என்பதைவிட பறந்து கொண்டிருக்கின்றன.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் புதுமை, அற்புதம் என்று புகழ்ந்து தள்ளியதைத்தான் இப்போது பழமை என்று உதறித் தள்ளுகிறோம்.
ஒவ்வொரு துறையிலும் அதன் ஜாம்பவான்கள் தங்கள் திறமைகளால் புதுமைகளை உருவாக்கி மக்கள் அனுபவிக்க விருந்தாக்குகின்றனர்.
கட்டடக்கலையும் தனது புதிய வளர்ச்சியில் புதிரான வீடுகளை உருவாக்கி மக்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அந்த புதிரான வினோத வீடுகள் சிலவற்றுக்கு செல்வோம்.
பல்கேரியாவின் நத்தை வீடு
சோஃபியா என்ற இடத்தில் நத்தையை போன்ற அமைப்பு கொண்ட இந்த வீடு உள்ளது. நத்தைகளின் வசிப்பிடத்திலேயே கட்டப்பட்டுள்ளது இன்னும் விஷேசம் என்னவென்றால் இதை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
இதில் பயன்படுத்திய கான்கிரீட்டின் எடை, தண்ணீரின் எடையில் நாலில் ஒரு பங்கு. இந்த வினோத வீடு கட்டடத் திறமைக்கு சவாலானதுதான்.
பறக்கும் வண்டு வீடு
நாம் புல்வெளிகளில் பார்க்கும் ஒரு வட்டம் போன்ற உடலமைப்பு கொண்ட வண்டின் வடிவத்தில் இந்த வீடு உள்ளது.
இது பின்லாந்தை சேர்ந்த கட்டட நிபுணர் மட்டி சர்ரோனென் என்பவரால் 1968 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. ஒரு கேபினை போல அமைக்கப்பட்டது. எட்டு பேர் வசிக்கும் அளவிலான இந்த வண்டு (வீடு) டெக்ஸாசில் உள்ள ஒரு கடினமான தரையில் அமர்ந்துள்ளது.
தேநீர் குடுவை வீடு
வாஷிங்டனில் உள்ள ஷில்லா என்ற இடத்தில் 1922ம் ஆண்டில் கட்டப்பட்டது. ஜனாதிபதி வாரென் ஜி. ஹார்டிங் நினைவாக இந்த அற்புதமான தேநீர் குடுவை போன்ற குவிமாட வீடு கட்டப்பட்டது. இந்த சிறிய வீடு வசிப்பதற்கு ஆபத்தான இனிய அனுபவத்தை தரும் வீடு.
விமான ஹொட்டல்
பறக்கும் 727 ஹோட்டல் என்று அழைக்கப்படும் இது, பார்ப்பதற்கு விபத்துக்குள்ளான விமானம் மரத்தில் கிடப்பது போல காட்சியளிக்கும்.
உண்மையிலேயே இந்த ஹொட்டல் விமானம் முன்பு தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொலம்பியாவுக்கு பறந்து சென்றதுதான். பிறகு விமானம் விலைக்கு வாங்கப்பட்டு அதன் கூடு ஹொட்டலாக மாற்றப்பட்டது. இந்த பறக்கும் ஹொட்டல் கோஸ்டாரிகாவில் உள்ளது.
குவிமாட காலனி வீடுகள்
இந்த காலனியில் உள்ள 70 குவிமாட வீடுகளும் ஐக்கிய அமெரிக்காவால் கட்டப்பட்டது.
இந்தோனேசியாவின் பழைய நகரமான யோக்யகர்தாவுக்கு அருகில் உள்ள சம்பர்ஹர்ஜோ கிராமத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் பூகம்பத்தில் வீடுகளை இழந்து தவித்தபோது அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக