ரஷ்யாவில் 4000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வேற்று கிரகவாசியின் மண்டை ஓடா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டின் கற்பாறைகள் நிறைந்த பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்பொது பெரிய அளவில் முட்டை வடிவிலான மண்டையோடு ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பெண்ணின் மண்டை ஓடு என்றும் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் பெரியதாகவும் முட்டையோடு வடிவிலும் இருப்பதால் வேற்று கிரகவாசியின் மண்டையோட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் இது மத்திய ரஷ்யாவில் வாழ்ந்த பூர்வகுடி மக்களை சேர்ந்த பெண்ணின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக