தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஜூலை, 2015

சீனாவின் அட்லாண்டிஸ்: திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்ட லயன் சிட்டி! (வீடியோ இணைப்பு)


சீனாவில் சிங்க நகரம் என்றழைக்கப்பட்ட பிரபல வரலாற்று சிறப்புமிக்க நகரம் மனிதர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
Shi Cheng (சிங்க நகரம்) என்றழைக்கப்பட்ட சீன நகரம், கிபி 25-200 காலக்கட்டத்தில் ஆன் அரச மரபினரால் வடிவமைக்கப்பட்டது.
ஐந்து மலைகளால் சூழப்பட்டு அமைந்திருந்த அந்த நகரம் பல பெருமைகளையும் கலைநயத்தையும் கொண்டு விளங்கியது.
இந்நிலையில், கடந்த 1959ம் ஆண்டு அந்த நகரம் மனிதர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
சீனாவில் 1959ம் ஆண்டு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வெள்ளத்தினை சமாளிக்கவும் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க அணை கட்டவும் அந்த நகரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
இந்த நீர்மின் திட்டத்திற்காக அந்த நகரில் பல நூற்றாண்டுகளாக வசித்து வந்த தலைமுறைகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அரசியல் மற்றும் பொருளாதார மையமாக செயல்பட்டு வந்த அந்த நகரம் மனிதர்களால் அளிக்கப்பட்டு செயற்கை ஏரியாக வடிவமைக்கப்பட்டது.
மேலும், 1959ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை பலரும் மறந்துவிட்டனர்.
பின்னர் சாகசங்களை விரும்பும் Scuba divers, வெளிநாட்டில் இருந்து அந்த இடத்துக்கு படையெடுக்க விரும்பினர்.
அவர்கள் அந்த ஏரியில் சுமார் 130 அடியில் நீருக்கு அடியில் அமைந்துள்ள அந்த நகரத்தின் அமைப்பினை கண்டு பிரமிப்படைகின்றனர்.
பல ஆண்டுகளாக மறக்கப்பட்ட அந்த நகரம் தற்போது பிரபல சுற்றுலா தளமாக மாறியுள்ளது.
அந்த நகரில் அமைந்திருந்த கோவில்கள், நினைவு சின்ன்ங்கள், சாலைகள் மற்றும் வீடுகள் என அனைத்தும் சிதையாமல் இன்னும் உள்ளபடியே உள்ளதால் பலரும் அதனை காண விரும்புகின்றனர்.
மேலும், இதனை சீனாவின் தொலைந்த நகரம் அட்லாண்டீஸ் என்றும் மக்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.
மரத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் கூட இன்னும் சிதையாமல் அப்படியே உள்ளது பார்ப்பவர்களை ஆச்சர்யபட வைக்கிறது.
பல நூற்றாண்டுகளை கடந்து இன்னும் கம்பீரமாக நீருக்கு அடியில் நிற்கும் அந்த நகரத்தின் புகைப்படங்கள் வெளியான போது அதன் புகழ் உலகளவில் பரவியது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீனா, அந்த இடத்தினை சுற்றுலாத் தளமாக மாற்றியது.
நீருக்கு அடியில் சென்றுவிட்டதால், அந்த நகரத்தினை காற்று, சூரிய வெப்பம் போன்றவற்றில் இருந்து அழியாமல் தண்ணீர் காப்பாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக