இணைய தேடலுக்கு பயன்படுத்தப்படும் மென்பொருளான இணைய உலாவிகளில் (Browsers) கூகுள் குரோமிற்கு அடுத்தபடியாக அதிகளவில் பயன்படுத்தப்படுவது Mozilla Firefox இணைய உலாவி ஆகும்.
இவ் உலாவியில் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் பயனர் இடைமுகமானது மீண்டும் வடிவமைவமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை Mozilla நிறுவனத்தின் பொறியியல் பகுதி இயக்குனரான Dave Camp உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளார்.
இதன்போது XML User Interface Language (XUL) எனும் இணைய மொழி பயன்படுத்தப்படவுள்ளது.
எனினும் இம் மொழியானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு சில காலமே ஆன நிலையில் இதன் பயன்பாடு வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக