தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 7 ஜூலை, 2015

சிவத் திருவுருவம்


உருவ நிலை

சிவ உருவ வழிபாட்டின் கீழ் இருபத்தியைந்து மகேசுவர மூர்த்தங்களும், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளும் வருகின்றன. 
ஐவகை உருவம்
மகா புராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சிவபெருமானது ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது. அவையாவன.
சத்தியோசாதம்
வாமதேவம்
தத்புருஷம்
அகோரரூபம்
ஈசன்
மகேசுவர மூர்த்தங்கள் சைவ சித்தாந்தபடி இருபத்தி ஐந்து வகையான சிவ வடிவங்களாகும். இவற்றை போக வடிவம், யோகவடிவம், வேக வடிவம் என்று மூன்றாக பிரிக்கின்றார்கள்.
போக வடிவம் - உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் யோக வடிவம் - தட்சிணாமூர்த்தி சுகாசனர் வேக வடிவம் - கங்காளர், வீரபத்திரர்.
அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

அருவ நிலை

இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாக வும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்கு வர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் என வும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்கு வர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண் ணால் பார்க்க முடி யாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.

அருவுருவ நிலை

இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத் தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர். இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது; ஞான சக்தியும் கிரியா சக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது. இதை போக சிவம் என்றும் அழைப்பர். இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும். சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும். அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத் தில் உள்ளது. சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்; இன்னது என கூற முடியாதது. உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம். நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவ லிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத் தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. சந்திரசேகரர், உமா மகேஸ்வரர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சுவந்தராரி, மாதங்காலி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீல கண்டர், சக்கரப் பிரதானர், கஜமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங் களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியா கவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக