தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

ஆண்களுக்கான ஆடை ரகசியங்கள்


ஆடைகள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்களை விட பெண்களுக்கு தான் வண்ண வண்ண நிறங்களில், விதவிதமான ஆடைகள் உள்ளன.
பண்டிகைகள், திருவிழாக்கள் என்று வந்துவிட்டாலே கடைகளிலும் பெண்கள் ஆடைகள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஆண்களுக்கு, என்றால் பேண்ட் ஷர்ட்டுகள் தான் அதிகமாக வெளிவருகின்றன.
ஆனால், இந்த பேண்ட் ஷர்ட்டுகளை அவர்கள் சரியாக தெரிவு செய்து அணிந்தால் அவர்களும் ஆணழகர்கள்தான்.
1. ஆண்கள் அணியும் சட்டைகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று நீளமான கோடுகள் போட்ட ஸ்ட்ரைப் சட்டைகள்(Strype shirt), இரண்டு, பிளெயின் சட்டைகள்(Plain Shirt), மூன்றாவது கட்டம் போட்ட செக்டு சட்டைகள்(Checked shirt). இவை காட்டன்(Cotton), டெரிகாட்டன்(Terry cotton) போன்ற துணிகளில் வருகின்றன.
அதே போல் பேண்டுகளும் டெரிகாட்டன், காட்டன் மற்றும் ஜீன்ஸ் போன்ற துணிகளில் கிடைக்கின்றன.
2. ஆனால், அலுவலகம் செல்லும் போது அவர்கள் உடைகளை தெரிவு செய்து அணியவேண்டும். ஒவ்வொருவரின் உடல் அளவு மாறுபடும். அதற்கு ஏற்ப சட்டை மற்றும் பேண்டுகளை தெரிவு செய்து அணிய வேண்டும்.
ஸ்லிம் பிட்(Slim Fit), ரெகுலர் பிட்(Regular Fit)மற்றும் ரிலாக்ஸ் பிட்(Relax Fit) என்று மூன்று அளவுகளில் சட்டைகள் கிடைக்கின்றன.
3. ஸ்லிம் பிட், ஒல்லியாக இருப்பவர்களுக்கு, ரெகுலர், மீடியமாக உள்ளவர்களுக்கு, ரிலாக்ஸ் குண்டாக இருப்பவர்கள் அணியும்படி வடிவமைத்துள்ளனர்.
4. சிவப்பாக, உள்ளவர்கள் கடும் நிற(Dark Colour) சட்டைகளை அணியலாம். மாநிறத்தில் உள்ளவர்கள் வெளிர் நிற(Light colour) பேன்ட் மற்றும் கடும் நிற சட்டை அல்லது கடும் நிற பேண்ட் மற்றும் வெளிர் நிற சட்டையும் அணிந்தால் பார்க்க நன்றாக இருக்கும்.
5. கருப்பு நிற ஷு, பெல்ட் எல்லா பேண்ட்டுக்கும் எடுப்பாக இருக்கும். அதே சமயம் மண் நிற ஷு(Brown) அணியும் போது, அதே நிற பெல்ட் அணியவேண்டும்.
6. டை, இதுவுமே ஆடைக்கு ஏற்ப மாறுபடும். சட்டையின் நிறத்துக்கு ஏற்ப அணியலாம் அல்லது மாறான நிறங்களில் டை தெரிவு செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக