தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 ஜூலை, 2015

டுவிட்டர் பற்றி நமக்குத் தெரியாத 10 உண்மைகள்!!!

twitterமக்கள் தங்களது சமூகத்துடன் இணையம் மூலமாக இணைப்பில் இருக்க துவங்கப்பட்டது தான் டுவிட்டர். 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சேவையானது இன்று உலகளவில் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றது.
பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் இந்த சமூக வலைதளம் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வியும் எழுகின்றது. எல்லோர்க்கும் இந்த தளத்தினை பயன்படுத்த தான் தெரிந்திருக்கின்றது, ஆனால் இதை தவிற டுவிட்டர் குறித்து பலரும் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
  • ஒவ்வொரு நிமிடமும் டுவிட்டரில் சுமார் 347,000 டுவீட்கள் அனுப்பப்படுகின்றன.
  • சிகரெட் மற்றும் மதுபானங்களை விட டுவிட்டர் அடிமைத்தனம் வாய்ந்ததாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆரம்பகாலத்தில் டுவிட்டர் துவங்கப்பட முன் ஃப்ரென்ட்ஸ்டாக்கர் என்ற பெயர் சூட்ட பரிசீலனை செய்யப்பட்டது.
  • பெடரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனில் டுவிட்டர் மொழி வழக்கத்தில் தனி அகராதியே இருக்கின்றது.
  • ஸ்வீடன் நாட்டு டுவிட்டர் பக்கத்தினை அந்நாட்டு குடிமக்களில் ஒருவர் தினமும் கையாள அனுமதிக்கப்படுகின்றது.
  • 2014 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 350,000 டுவீட்கள் பதிவு செய்யப்பட்டன.
  • ஒரு நாளில் சராசரியாக மேற்கொள்ளப்படும் டுவீட்கள் சுமார் 10 லட்சம் பக்கங்களை கொண்ட புத்தகமாக அச்சிட முடியும்.
  • அமெரிக்கர்களின் ஒவ்வொரு டூவீட்’ம் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ஆவணமாக்குகின்றது.
  • அமெரிக்க அரசாங்கத்தின் சிஐஏ தினமும் சுமார் 5 லட்சம் டுவீட்களை வாசிக்கின்றது.
  • 2009 ஆம் ஆண்டு முதல் சீனாவில் டுவிட்டர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக