உங்கள் உணவில் தினசரி 100 கிராம் ஓட்ஸ் சேர்த்துக் கொண்டால் 2 மாதத்தில் ஒன்றரை கிலோ வரை எடை குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளது.
பலருக்கும் காலை உணவு வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. ஆனால் பலருக்கும் ஓட்ஸை சரியாக சமைத்து சாப்பிடத் தெரியாது.
மேலும் ஓட்ஸ் சமைக்கும் பொழுது அதனுடன் அதிக கொழுப்புத் தன்மை உடைய எதையும் சேர்க்காதீர்கள். வெறும் நீரில் அரை உப்பு சேர்த்து வேகவைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதைப்பயன்படுத்தி எளிய காலை உணவையும் சமைக்கலாம். உடல்நலத்தைக் காக்கும் ஓட்ஸ் வெஜிடபுள் சப்பாத்தி எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
ஓட்ஸ் - 3/4 கப்
கடலை மாவு - 1/2 கப்
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/4 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
• ஓட்சை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து பொடித்து கொள்ளவும்.
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
• முதலில் ஒரு பௌலில் எண்ணெய் தவிர்த்து, அனைத்து பொருட்களையும் போட்டு, 10 நிமிடம் மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், உங்கள் உடலை ஆரோக்கியமாகதாக மாற்ற உதவும் ஓட்ஸ் வெஜிடேபிள் சப்பாத்தி தயாராகி விடும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக