தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஜூன், 2014

வயசானாலும் அழகு வேண்டுமா?

எப்போதும் இளமையான தோற்றத்துடன் வாழ்க்கை முழுவதும் காட்சியளிக்க சில எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
எளிய வழிமுறைகளான இவை அனைத்தையும் அன்றாடம் நீங்கள் எளிதாக செய்யலாம்.
நேர்மறையாக சிந்தியுங்கள்
உங்கள் மனரீதியான நிலையை உங்கள் ஒட்டுமொத்த தோற்றம் வெளிக்காட்டிவிடும். அதனால் எப்போதுமே நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள். எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு சோர்வை உண்டாக்கி சீக்கிரமே வயதான தோற்றத்தை உண்டாக்கி விடும்.
தியானம்
தினமும் வெறும் 5 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டாலே போதுமானது. அது உங்களுக்கு மிகப்பெரிய உதவியை உண்டாக்கும். தியானத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் தெளிவடைவது மட்டுமல்லாமல், உங்கள் எண்ணங்களை நிலைப்படுத்தி நேர்கோட்டில் கொண்டு வரும்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல்
விரைவிலேயே வயதாவதற்கு புகை பிடிக்கும் பழக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. அது நோய்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கி, உடலில் ஆக்சிஜன் மற்றும் நீர்ச்சத்தை குறைத்துவிடும். இதனால் அதிக சுருக்கங்கள் உண்டாகும்.
சர்க்கரையை தவிருங்கள்
சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் உட்கொண்டால், உடல் எடை சற்று குறைவதுவோடு, சரும சுருக்கங்களை குறைக்கவும் உதவும். சர்க்கரையை அதிக அளவில் உட்கொண்டால், க்ளைக்கோஜன் என்ற செயல்முறை செயல்படுத்தப்படும். இதனால் சுருக்கங்கள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக