கோடை வந்துவிட்டாலே அனைவருக்கும் உடல் நலம் பற்றிய பயமும் வந்து விடுகிறது.
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும்.
மேலும் சருமம் கோடைகாலத்தில் நினைத்ததை விட அதிகபாதிப்புகளை சந்திக்கும். எந்த வித உயர்தர முறையும் கைகொடுக்காமல் போகலாம்.
நமது சருமமத்தை காக்க சில பொருட்கள் வீட்டிலே இருக்கும் போது ஏன் வெளியில் தேடி அலைய வேண்டும். வாங்க அந்த பொருட்களை எப்படி சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
சருமத்தில் குளிர்ச்சி
தயிரில் குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, சருமம் குளிர்ச்சியடைவதோடு, பழுப்பு நிற சருமமும் மறைந்து விடுகிறது.
முகத்தில் புத்துணர்வு
பாலில் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை இறுக்கமடையடச் செய்வதற்கான பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் முகத்தை பாலால் கழுவி வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சருமத்தில் அழகு
கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமின்றி, அழகிலும் நன்மை தருகிறது. அதற்கு வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், சருமம் அழகோடு மின்னும்.
சருமப்பொலிவு
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தர்பூசணியும் அழகுப் பராமரிப்பில் பயன்படுகிறது. எனவே கோடையில் கிடைக்கும் இந்த பழத்தை வைத்து, முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க் போட்டால், முகம் பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் முதுமைத் தன்மை
தக்காளி அழகுப் பராமரிப்பில் பெரிதும் பயன்படுகிறது என்று அனைவருக்கும் தெரிந்ததே.
அதிலும் தக்காளியை வைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முதுமைத் தோற்றம் நீங்கி, சுருக்கங்கள் குறைந்து, சரும நிற மாற்றமும் மறையும்.
சரும நிறம் அதிகரிக்க
ஸ்ட்ராபெர்ரி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க மட்டுமல்லாமல், இளமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவதையும் தடுத்து, சருமத்திற்கு அழகான நிறத்தையும் தரும்.
இனிமையான சருமம்
மாம்பழம் மிகவும் சுவையுடன் இருப்பதோடு, அழகு பராமரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முகப்பரு நீங்க
பொதுவாக சந்தனம் என்றாலே, முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணம் உள்ளது.
அதிலும் சந்தனப் பொடியை தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு போட்டால் முகம் நன்கு அழகாக ஜொலிக்கும்.
சருமத்தில் குளுமை
கோடையில் உடனே முகத்தை பொலிவுடன் வெளிப்படுத்த வேண்டுமெனில், வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தை தேய்த்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்துவிடும்.
சருமத்தில் ஆரோக்கியம்
முகத்தை அழகாகவும், குளிர்ச்சியுடன் வைத்திருக்க ரோஸ் வாட்டர் சிறந்ததாக இருக்கும். அதற்கு ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து வர வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக