சாதாரண தும்மல் மற்றும் இருமலுக்கு காரணமாக விளங்கும் வைரஸானது உடற் பருமன் அதிகரிப்பதற்கு வழிவகை செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்
பொதுவாக இலேசான இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு காரணமாகவுள்ள அடினோவைரஸ் 36 என்ற வைரஸானது உடலின் கொழுப்புக் கலங்களினூடாக ஊடுருவி வழமையைவிட அதிகளவு கொழுப்பை சேமிக்க அவற்றைத் தூண்டுவதாக இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய அமெரிக்க மருத்துவரான றிச்சாட் அட்கின்ஸன் கூறினார்.
மிருகங்களில் மேற்படி வைரஸை ஏற்றி 15 வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த உண்மை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
அந்த வைரஸ் ஒருவரது உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் மாறாத நிலையிலேயே அவரது நிறையை அதிகரிக்கச் செய்யக்கூடியது என அவர்கள் கூறுகின்றனர்.
பல்கேரிய தலைநகர் சேர்பியா நகரில் இடம்பெற்ற உடற் பருமன் தொடர்பான 21 ஆவது ஐரோப்பிய கூட்டத்திலேயே மேற்படி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக