தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 ஜூன், 2014

நொடியில் சமைக்கலாம்- வெஜ் சாண்ட்விச்!

நொடியில் சமைக்கலாம்- ஸ்பெஷல் ரெசிபி வெஜ் சாண்ட்விச்.
தேவையானவை
சால்ட் பிரெட் ஸ்லைஸ் - 10
கேரட் துருவல், கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப்
வெங்காயம், குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று
வெண்ணெய் - 100 கிராம்
புதினா - சின்ன கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
புதினாவை லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் வெண்ணெய், இஞ்சி விழுது சேர்த்து நன்கு குழைத்து, பிரெட் துண்டின் மேல் பரவலாகத் தடவவும்.
அதன் மேல் வதக்கிய காய்களை பரவலாக வைத்து, மல்லித்தழைத் தூவி மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் (தவாவில் சூடுபடுத்தியும் தயார் செய்யலாம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக