பிறப்பு
ஃபிரெஞ்சு தளபதியும் பேரரசருமான முதலாம் நெப்போலியன் 1769 இல் கார்சிக்காவிலுள்ள அஜேசியோவில் பிறந்த அவரது இயற்பெயர் நெப்போலியன் போனபார்ட்.
ஆரம்ப வாழ்க்கையும் அவரது வளர்ச்சியும் அவர் ஃபிரெஞ்சு நாட்டவரை ஆதிக்க வெறியராகவே கருதினார். ஆயினும் அவர் ஃபிரான்சிலுள்ள படைத்துறைக் கழகங்களில் 1785 இல் தமது 16 ஆம் வயதில் தேர்ச்சிப் பெற்றார்.
தூலோன் வெற்றி அவருக்குப் பதவி உயர்வையை பெற்று தந்தது. இந்த வெற்றியின் விளைவாக 1796ல் அவர் இத்தாலியில் ஃபிரெஞ்சுப் படையின் தளபதியானார்.
1798ல் நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்த போது அந்த படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
இதன் பின்னர், 1799ல் வேறு வழியில்லாமல் நெப்போலியன் தம் படையை எகிப்தில் விட்டு விட்டு ஃபிரான்ஸ் திரும்பியுள்ளார்.
ஃபிரான்ஸ் திரும்பிய நெப்போலியன், அபேசியேயுடனும் பிறருடனும் சேர்ந்து அரசாங்கத்தைக் கவிழ்த்துள்ளார். நெப்போலியன் வேகமாக உயர் அதிகாரத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 1793 இல் தூலோன் முற்றுகைக்கு முன் அவரை யாரென்று பலருக்கும் தெரியாது.
அதுவரை அவர், ஃபிரெஞ்சு குடிமகன் என்று கூட சொல்ல முடியாத, 24 வயதுள்ள ஒரு கீழ் அதிகாரியாகவே இருந்துள்ளார்.
தலைவர் பதவியும் அவரின் சீர்திருத்தங்களும்
இதனையடுத்து, அடுத்த 6 ஆண்டுக்குள்ளாக அதாவது அவரது 30 வயதிற்குள் அவர் ஃபிரான்சு மக்களின் மனங்கவர்ந்த, ஈடற்ற மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக வளர்ந்தார்.
மேலும், அவர் அந்த பதவியில் 14 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்ததுடன் பல சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்துள்ளார்.
அவர் ஆட்சியில் இருந்தபோது ஃபிரான்சின் ஆட்சித் துறையையும் சட்ட முறையையும் பெரிதும் திருத்தியமைத்தார்.
எடுத்துக்காட்டாக, அவர் நிதி அமைப்பையும், நீதித் துறையையும் சீர் திருத்தினார், ஆட்சித் துறையை ஒழுங்குப்படுத்தினார்.
ஆனால், இந்த மாற்றங்கள், ஃபிரான்சின் முக்கிய நிலையான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், உலகைப் பெரிதும் பாதிக்கவில்லை.
ஆயினும், நெப்போலியனின் சீர்திருத்தமான புகழ்மிகு ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு மட்டும் ஃபிரான்சின் எல்லைகளையும் கடந்து உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
பேரரசர் நெப்போலியன்
நெப்போலியன் எப்போதுமே தன்னை ஃபிரெஞ்சுப் புரட்சியின் பாதுகாவலர் என்றே வலியுறுத்தி வந்துள்ளார். ஆயினும் 1804ல் அவர் தம்மைத் தாமே ஃபிரான்சின் பேரரசராக்கிக் கொண்டார்.
மேலும், சகோதரர் மூவரை ஐரோப்பிய அரசுகளின் அரியணையில் அமர்த்தினார். இச்செயல்களைக் கண்டு ஃபிரெஞ்சுக் குடியரசுவாதிகள் பலர் வெகுண்டுள்ளனர். அவரின் செயல்கள் ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களையே சிதைத்து விட்டதாக கருதியுள்ளனர்.
வீழ்ச்சியின் ஆரம்பம்
பின்னர் 1802ல், இங்கிலாந்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் நீண்டகாலப் போர் தொடங்கியது. நெப்போலியனின் படைகள் நிலத்தில் வெற்றிகளைக் குவித்தப் போதிலும், இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு அதன் கப்பற்படையை முறியடிக்க வேண்டியிருந்தது.
பின்னர் ஜூன் 1812ல் நெப்போலியன் தமது பெரும்படையுடன் ரஷ்யாவினுள் நுழைந்தார். அதன் விளைவு, 5 வாரங்கள் மாஸ்கோவில் தங்கிவிட்டு ரஷ்யர்கள் பணிந்து அமைதி வேண்டுவார்கள் என்று நம்பி, இறுதியில் நெப்போலியன் பின்வாங்கத் தீர்மானித்தார்.
ஆனால், அதற்குள்ளாகக் காலம் கடந்து விட்டது. ரஷ்யப் படைகளின் தாக்குதல்களும், ரஷ்யாவின் குளிர்காலத்தின் கடுமையும், ஃபிரெஞ்சு படைகளின் உணவுப் பொருள் பற்றாக்குறையும் ஒன்று சேர்ந்து பின்வாங்கிய ஃபிரெஞ்சு படைகளை நிலை குலைந்து ஓடச் செய்தன.
நெப்போலியன் பெரும்படையில் பத்தில் ஒரு பகுதியினரே ரஷ்யாவிலிருந்து உயிருடன் வெளியேறினர்.
ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய அதுவே தருணமென்பதை உணர்ந்தன.
அரியணை துறந்த நெப்போலியன்
அவை ஒன்று சேர்ந்து நெப்போலியனை எதிர்த்தன. அக்டோபர் 1813 இல் லீப்சிக் போரில் நெப்போலியன் மற்றொரு மாபெரும் தோல்வியைத் தழுவினார்.
அடுத்த ஆண்டு அவர் அரியணை துறந்தார். இத்தாலியக் கரைக்கப்பாலுள்ள சிறிய எல்பா தீவுக்கு அவர் கடத்தப்பட்டார்.
1815 இல் நெப்போலியன் எல்பாவிலிருந்து தப்பி, ஃபிரான்ஸ் திரும்பினார். அங்கு மக்கள் அவரை வரவேற்று மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.
வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ போர்
ஆனால், பிற ஐரோப்பிய அரசுகள் உடனே அவர் மீது போர் தொடுத்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த நெப்போலியன் பங்கேற்று பல நாட்களாக நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ போரில் நூறு நாட்களுக்குப் பிறகு இறுதியாக முறியடிக்கப்பட்டார்.
வாட்டர்லூ போருக்குப் பிறகு ஆங்கிலேயர் அவரை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா எனும் சிறிய தீவில் சிறைப்படுத்தினர்.
மறைவு
செயிண்ட் ஹெலினா தீவில் மாவீரன் என்று உலகெங்கிலும் அழைக்கப்படும் நெப்போலியன் மே 5ம் திகதி மர்மமான முறையில் இறந்தார்.
நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்த வேளையில் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவர் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருப்பதற்கு காரணம் வயிற்று வலி தான் எனவும் நம்பப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக