சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.
புதிய நட்சத்திரத்திற்கு, ஜே085510.83-071442.5 என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
வியாழன் கிரகத்தை விட மூன்று முதல் 10 மடங்கு வரை இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக