இந்த புதன் இருக்கிறாரே, சூரியனுக்கு மிக அருகில் உள்ளவர். சூரியனை 87.97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார். ஆனால் கொஞ்சம் சோம்பேறி! தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 58.7 நாட்கள் எடுத்துக் கொள்வார்!
மற்ற கிரகங்களில் எல்லாம் வெளிப்பாறை 70 சதவீதமும், இரும்பு உள்ளகம் 30 சதவீதமாகவும் இருக்கும். புதனார் மட்டும் தலை கீழ். வெளிப்பாறை 30 சதவீதம், இரும்பு உள்ளகம் 70 சதவீதம். ஏதோ ஒரு பொருள் மணிக்கு 45000 மைல் வேகத்தில் புதனுடன் நேருக்கு நேர் மோதியதால் அதைச் சின்னா பின்னமானதாகவும், பின் நிறையீர்ப்பு விசை காரணமாக அவை ஒன்று சேர்ந்ததால் வெளிப்பாறைப் பகுதி குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இத்தனைக்கும் புதனார் பூமியை விட 3 மடங்கு சின்னவர் தான். 4880 கி.மீ. விட்டமே உடையவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர் சூரியனுக்கு அருகிலேயே இருப்பவர் ஆதலால், சில சமயங்களில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னோ, சூரிய உதயத்திற்கு முன்னோ, தெளிந்த வானத்தில் நம் வெறும் கண்களால் இவரைக் காணலாம்! உதாரணமாக இந்தப் படத்தைப் பாருங்கள்! 2004 மார்ச்சில் இங்கிலாந்தில் சூரிய அஸ்தமனத்திற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல படங்களை கணினியின் மூலம் ஒன்றிணைத்துத் தந்திருக்கிறார்கள். இவர் தான் புதன்!
பார்வைக்கு நமது சந்திரனைப் போலவே இருக்கும் புதன். இவருடைய சுற்றுப்பாதை பூமியினுடையதை விட மூன்றில் ஒரு பங்கு தான். இவர் மெதுவாகச் சுற்றுவதால் இரவில் -180டிகிரி செல்சியசாக இருக்கும் இவர் பகலில் 400 டிகிரிக்கு எகிறிவிடுவார்.
சூரியனின் அருகில் வரும்போது மட்டும் ஒவ்வொரு முறையும் இவரது சுற்றுப்பாதை சற்றே மாறி விடும். ஏன் தெரியுமா? நம் மேதை ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கையை நிரூபிப்பதற்கு!
இதுவரை இவர் அருகில் சென்றவர் 1974ல் அனுப்பிய மரைனர் 10 என்ற கலம் தான்.
சூரிய குடும்பம் பாகம் 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக