குல தெய்வம் என்பது , உங்கள்
குலத்தில் தோன்றிய உங்கள்
முன்னோர்களாகக் கூட இருக்கக்
கூடும் . அல்லது உங்கள் குடும்பம்,
சமூகம் அல்லது பல குடும்பங்கள்
விளங்க தங்கள்
உயிரையே கொடுத்து காப்பற்றியவராய்
கூட இருக்கலாம். எந்த
ஒரு மனிதனுக்கும்
ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட
குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட
வந்து உங்கள்
துக்கங்களை போக்குவது உங்கள்
குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல
தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால்,
முதலில் மீண்டும் தொடங்குங்கள்.
www.fb.com/ஆன்மீகதகவல்கள்
வேறு எந்த தெய்வமும்
அதற்கு இணை இல்லை.
உங்களது குலதெய்வம்
கோவிலுக்கு மாதம்
ஒருமுறை கண்டிப்பாக
சென்று வரவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச்
சென்று பூஜை செய்வதற்கும்,குல
தெய்வத்தை வணங்குவதற்கும்
மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற
கோவில்களுக்குச்
செல்லும்போது தேங்காய்,பழம்
வாங்கி அர்ச்சனை செய்து
திரும்புவீர்கள்.ஆனால்
குலதெய்வத்தை
வழிபடச்செல்லும்போது கூடுதலாக
ஒரு கடமையும்
இருக்கின்றது.உங்களது குலதெய்வம்
கோவிலுக்குச் சென்றதும்
பொங்கல்வைத்து படையல்
போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை
செய்து திரும்ப
வேண்டும்.இதை செய்வதே முறையான
குலதெய்வ வழிபாடு ஆகும்.
வீடு கட்டுவதற்கும்,
திருமணம் செய்வதற்கும்
முன்பு குலதெய்வத்தை
வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக